அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கம் ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 24 மே, 2010

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கம்


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத
பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை
இஸ்லாமிய
சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று.
முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை
 கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம்

இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால்

உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள்,

உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின்

மனைவி...  போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில்

மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக்

கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)

நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன.

இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம்

செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்?

இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான்

பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன்.

(அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)

நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)


ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக,

நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும்

தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான்

செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)



நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம்
முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள்
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ,
பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை
உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ
முஸாஃபஹா செய்தாலும் சரியே!
நன்றி-  இஸ்லாம் கல்வி.காம்
முஸ்லிம் முன்னேற்ற கழகம்,
துபாய் .


The battle for the FIH Hockey World Cup Drag n' drop

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்