மங்களூரில் ஏர் இந்தியா விமான விபத்து: 163 பேர் பலி! ~ சஹாரா தமிழ்

ads

சனி, 22 மே, 2010

மங்களூரில் ஏர் இந்தியா விமான விபத்து: 163 பேர் பலி!

AI plane crashes in Mangalore, 160 feared deadமங்களூர்: துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது ஏற்பட்ட விபத்தில் 163 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 169 பேர் பயணம் செய்தனர். விமானம் தீப்பிடித்து எரிந்து வருவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தசம்பவம் இன்று காலை 6.30 மணிக்கு நிகழ்ந்தது . சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் பிரபுல் படேல் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்க் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் பேசினார் .

மேலும் விபரங்களுக்கு (Helpline Numbers): 011-25656196, 011-25603101, 0824-2220422, 0824-2010167, 00971-4-2165828, 00971-4-2165829.

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது ஏற்பட்ட விபத்தில் 60 பேர் பலியானனார்கள். இதனையடுத்து பயணிகளின் உறவினர்கள் விபத்து பற்றி விவரம் அறிய 011-25656196, 25603101 என்ற தொலைபேசி எண்களுக்கு டயல் செய்யலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற் கட்ட விசாரணையில் விபத்து குறித்து காரணம் தெரியவந்தது.

விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விபத்து குறித்து முதற் கட்ட விசாரணை அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. அறிக்கையில் விமானம் தரையிறக்க போதிய வெளிச்சம் இல்லாதல் இந்த விமான விபத்த ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்திற்கு 10 கி,மீ தொலைவிலுள்ள மலை மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூர் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு சோனியா காந்தி உள்பட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த பிரதமர் மன்மோகன் சிங், விமான விபத்து செய்தி கேட்டு தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும், பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மேலும் விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டு அறிந்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 வது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். விமான விபத்து காரணமாக விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு சம்பவ இடத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி விரைகின்றனர்.

விமானத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டிற்குள் வந்தது! - விமானம் மலை மீது மோதியதால், விமானம் முழுவதும் தீ பிடித்து எறிந்தது. இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சுமார் 25 தீ அணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்ட்டது.

6 பேர் காயத்துடன் மீட்பு! - விமான விபத்தில் 163 பேர் பலியாகி உள்ள நிலையில் 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரண நிதி! - விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது, மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சுமார் ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்