"தமிழகம் முழுவதும் குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை தேர்தல் கமிஷன் கண்டறிந்து முடக்கினால் மட்டுமே இந்த தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறும்,'' என, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா கூறினார்.
இது குறித்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறியதாவது : தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், சட்டசபை தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்று அவர் விரும்புவதை காட்டுகிறது. சமீபத்தில், குண்டல்பட்டியில் கூட அதிரடி வாகன சோதனைகள் நடத்தி, பல லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றியிருக்கின்றனர். தேர்தலை நடுநிலையாக நடத்த, தேர்தல் அதிகாரிகளின் பேச்சுக்கள், செயல் வடிவம் பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது, மத்திய, மாநில உளவுத் துறைகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த பணத்தைக் கொடுத்து வாக்காளர்களைக் கவர, தி.மு.க., நினைக்கிறது. தலைமை தேர்தல் கமிஷனர் இது குறித்து அதிரடி ஆய்வு நடத்தி, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கைப்பற்ற வேண்டும். அப்போது தான், தேர்தல் கமிஷன் நினைக்கும் வகையில் தேர்தல் நடுநிலையாக நடக்கும். இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார்.
வியாழன், 10 மார்ச், 2011
குடோன்களில், தி.மு.க.,வினர் பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைத்துள்ளனர் : மனித நேய மக்கள் கட்சி
11:28 PM
மனிதநேய மக்கள் கட்சி