சஹாரா தமிழ்: மனிதநேய மக்கள் கட்சி

ads

மனிதநேய மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனிதநேய மக்கள் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் அறிக்கை...


               
                  அந்தச் செய்தி ஒரு கெட்ட கனவாக இருந்திருக்கக்கூடாதா? என நாடே துடித்தது. மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்ற துயர செய்தி உறுதியான போது, தனது வீட்டில் ஒருவர் இறந்துவிட்டது போன்ற சோகத்தில் ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் கலங்கியது என்றால் அதுமிகையில்லை. அவர் இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கக்கூடாதா? என ஒவ்வொரு இந்தியனின் இதயமும் துடிக்கிறது.

எப்போதும் நாட்டைப்பற்றிய கவலை, தொலைநோக்குச் சிந்தனைகள், சலிப்பற்ற உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்த முன்னோக்குப் பார்வை, ஏழைகளின் மீதான அக்கறை, குழந்தைகள் மீதான பரிவுடன் கூடிய ஈடுபாடு, மாணவர் சமுதாயத்தின் மீதான நம்பிக்கை என அவரது நடவடிக்கைகள் அவரை “மக்களின் ஜனாதிபதியாக” நாட்டு மக்களின் இதயத்தில் குடி அமர்த்தியது.

துடிப்பான இந்தியாவை உருவாக்கி, நாட்டை உலகின் தலைசிறந்த வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் கனவு கண்டதோடு மட்டுமின்றி அந்தக் கனவை நோக்கி இளைய தலைமுறையை வழிநடத்தினார். அவரது எழுத்துக்களும், உரைகளும், நாளைய தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடியதாகும். அவர் ஏவுகணை தொழில்நுட்பத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் காட்டிய அதே ஆர்வத்தை கிராமப்புற வளர்ச்சியிலும் காட்டினார். அது அவரது மனிதநேயத்தைப் பறைசாற்றுகிறது.

அனைத்துத் துறைகளையும் குறித்த ஆழமான அறிவும், அன்றாட உலகின் முன்னேற்றங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆர்வமும் அவரை துடிப்பானத் தலைவராக உலகிற்கு காட்டியது. அவரது வருகையை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் வரவேற்று மகிழ்ந்தன. அவரது உரைக்காக பல நாட்டு பல்கலைக்கழங்கள் காத்திருந்தன.

வாழ்நாள் முழுக்க மாணவர்களை சந்திப்பதிலேயே ஆர்வம் காட்டிய அவரது வாழ்க்கை கடைசியில் ஒரு மாணவர் சந்திப்பிலேயே நிறைவு பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.
அறிவியல், அரசியல், அரசு நிர்வாகம், சமூகசேவை ஆகியவற்றோடு இலக்கியத்திலும் அவர் காட்டிய ஆர்வம் சிறப்பானது. தமிழின் மீது தனியாத தாகம் கொண்ட அவர் தமிழில் பேசுவதைப் பெருமையாகக் கருதினார்.

தனது இறைநம்பிக்கைக் குறித்தும், அன்றாட தொழுகை குறித்தும் தம்பட்டம் அடித்ததில்லை. அவர் எல்லோரின் கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், மதித்தார். அனைத்து இந்தியர்களையும் தமது சகோதர, சகோதரிகளாக பாவித்தார். இவை எல்லாம் அவரது சிறப்புகளில் முக்கியமானதாகும்.

காந்தி மற்றும் நேருவிற்குப் பிறகு அனைத்து இந்தியர்களாலும் போற்றப்பட்டு, சர்வதேசத்தால் அங்கீரிக்கப்பட்ட ஒரே தலைவர் அப்துல் கலாம் தான் என்றால் அது மிகையில்லை. அவர் பன்முக ஆளுமைத் திறன் கொண்டவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் அறிவுஜீவியாக உலக அரங்கில் மதிக்கப்பட்டார்.

தன் புகழிலும், பொது வாழ்விலும் குடும்பத்தினரை அண்டவிடாத; கரைப்படியாத நேர்மையாளரான அவர் ஒரு முன்மாதிரி இந்தியராக வாழ்ந்து சென்றிருக்கிறார்.
இன்று அப்துல் கலாமின் உழைப்பும், சிந்திப்பும் முற்று பெற்றுவிட்டது. இந்த நாட்டுக்காகவே துடித்த அவரது இதயம் தன் துடிப்பை நிறுத்தியிருக்கிறது. மரணம் என்பது வாழ்க்கைக்குத் தானே தவிர வரலாற்றிற்கு அல்ல. அந்த மனிதநேயரை இந்திய வரலாறு தன் வைர வரிகளால் பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை. அவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

சனி, 11 ஜூலை, 2015

‎சமூக இணையதளங்கள்‬:‎ வரமா‬? ‎சாபமா‬?



தமிழக முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கும் சக்தி எது என்றால், அது எதிரிகளின் ரகசிய திட்டமிடல்கள் என பலரும் கருதுவர்.
பொறுப்புணர்வோடு; பரந்த கண்ணோட்டத்தோடு உன்னிப்பாக ஆய்வு செய்தால்; சமூக இணைய தளங்களில் பக்குவமற்ற சில முஸ்லிம் இளைஞர்கள் பதிவிடும் கருத்துக்கள்தான் பேராபத்தை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்களின் நியாயங்களையும்,உரிமைகளையும் வெளிக்கொண்டுவரஊடகங்கள் இல்லையே என்ற பெரும் ஏக்கம் நிலவியது. அது ஒரு காலம். இன்று இணையதளம், வலைதளம், யூ டியூப் ஆகியவற்றைத் தாண்டி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக இணையதளங்கள் வந்தபிறகு அந்த ஏக்கம் ஓரளவு தீர்ந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட்போன்கள் எல்லோரிடத்திலும் புழங்கத் தொடங்கியதன் விளைவு, யாரெல்லாம் சமூக இணையதளங்களில் கணக்குகளைத் தொடங்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கை ஆசிரியர்களைப் போலவும், சமுதாயப் பிரதிநிதிகள் போலவும், ஆழமான சிந்தனையாளர்கள் போலவும் கருதிக்கொண்டு மனம்போன போக்கில் கருத்துக்களை வெளியிட துணிந்துவிட்டார்கள்.

‪#‎உள்_சண்டைகள்‬
அதன் விளைவு சிறிய விஷயங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டிய விஷயங்கள் சந்திக்கு வருகின்றன. ஓரிறையைப் பற்றிப் பேசுபவர்கள் மத்தியில் ஓராயிரம் சண்டைகள் நடக்கின்றன.

‘‘பாவத்திலும், பகைமையிலும் உதவி செய்து கொள்ளாதீர்கள்’’ என இறைவன் குர்ஆனில் (17:36) அறிவுறுத்தியதை யாரும் கண்டுகொள்வதில்லை.

எந்த சமூகங்களிலும் இல்லாத அளவுக்கு உள்சண்டைகள், இயக்க மோதல்கள், சமூக இணைய தளங்களில் தமிழக முஸ்லிம்களுக்குமத்தியில் நடக்கிறது. வேறு எங்கும் இதுபோன்ற அட்டூழியங்கள் இல்லை.

இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொண்ட தமிழ் பேசும் நல்லுலகின் நண்பர்கள், இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போகிறார்கள். ‘இஸ்லாம் நல்ல மார்க்கம், ஆனால் முஸ்லிம்கள் சரியில்லை’ என்ற பெர்னாட்ஷாவின் கருத்து அவர்களுக்கு இவர்களால் நினைவூட்டப்படுகிறது.

‪#‎நட்புகளை_இழக்கும்_வேதனை‬

இதைத் தாண்டி, பீதியடையும் அளவுக்கு சில முஸ்லிம் இளைஞர்களின் சமூக இணையதள பதிவுகள் இருக்கின்றன. சங்பரிவார் சக்திகளின் கருத்துகளுக்கு எதிர்வினைப் புரிகிறோம் என்ற பெயரில் நடுநிலையாளர்களை எதிரிகளின் பக்கம் தள்ளிவிடும் பாதகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

இந்தியாவில் 20 சதவீதமாக வாழும் நாம் தமிழகத்தில் 7 சதவீதமாக இருக்கிறோம் என்பதையும், நம்மோடு வாழும் பிற சமுதாய மக்களில் 95 சதவீதம் பேர் அன்பையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளாமல் தாங்கள் சவூதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்கிறோம் என்ற கற்பனையில் பொறுப்பில்லாமல்; சிந்திக்காமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.

எதிரிகள் யார்? பொதுமக்கள் யார்? என பிரித்துப் பார்க்கும் அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் பிற சமூகங்களில் இருக்கும் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்குகிறார்கள். இன்று தமிழகத்தில் பிற சமூகங்களில் இருக்கும் 95 சதவீத நடுநிலையாளர்களால்தான் சங்பரிவார் சக்திகள் ஒரு வட்டத்தை மீறி வளர முடியாமல் இருக்கிறார்கள் என்பதை மனசாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

‪#‎மிகைப்படுத்துதல்_நியாயமா‬?

இந்த நாடே இந்துத்துவ சக்திகளிடம் போய்விட்டது போலவும், நாட்டில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருப்பது போலவும் சிலர் கருத்துக்களை விதைக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள்தான் தங்களையும் அறியாமல் சங்பரிவார் சக்திகளின் சதிகளுக்கு வலு சேர்க்கிறார்கள்.

நமது இருப்பிடங்களுக்கு அப்பாற்பட்டு ‘‘பன்முக சமூகங்கள் வாழும் ஒரு உலகம்’’ இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். சமூக இணையதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்கள் அனைவராலும் பார்க்கப்படுகின்றன என்ற சிறு விஷயத்தைக்கூட உணரும் நிலையில் அவர்கள் இல்லை.
‘உமக்கு எதில் தெளிவு இல்லையோ, அதில் கலந்து கொள்ளாதீர்’ என இறைவன் திருக்குர்ஆனில் (17:36) அறிவுறுத்துகிறான்.

ஆனால் ‘கருத்து பைத்தியங்களாக’ சிலர் உருவாகி முஸ்லிம் சமுதாயத்தை அழிவின் விளிம்பில் தள்ள முயற்சிக்கிறார்கள். தாங்கள் பதிவிடும் கருத்து எவ்வாறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அதை பிற சமூக மக்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என்பதையும் உணர்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் சமுதாய நலன் குறித்த விஷயங்களில் மௌனமாக இருப்பதே அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் சிறந்த பணியாகும்.

‪#‎இறைவனின்_எச்சரிக்கை‬

எங்கேயாவது ஒரு ஊரில் சமூகப் பதற்றம் ஏற்பட்டுவிட்டால் அது உடனே பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. பதட்டம் தூண்டப்படுகிறது. கள நிலவரங்கள் தெரியமலேயே மிகைப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்டவர்களை திருக்குர்ஆன் பின்வருமாறு கண்டிக்கிறது.

"நம்பிக்கைக் கொண்டோரே! ஒருவர் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்". திருக்குர்ஆன் (49:6)

ஆனால் பரபரப்பு செய்திகளைப் பரப்புவதில் இங்கே ஒரு போட்டியே நடக்கிறது. யாராவது ஒரு போலீஸ்காரர் அல்லது அதிகாரி முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி இழைத்துவிட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவரை சரிசெய்ய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு பதிலாக, காவித்துறையே... எனத் தொடங்கி மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் களத்தில் பிரச்சனையைக் கையாளக் கூடியவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டு,

பிரச்சனைகள் திசை மாறுகின்றன. நீதியைக் கேட்க வேண்டிய இடத்தில், மன்னிப்பு கேட்கக்கூடிய தலைகீழ் நிலை ஏற்படுகிறது. இப்படி அதிகாரிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படுவது நியாயம்தானா?

காவல்துறை அதிகாரிகளை எல்லை மீறி விமர்சிக்க கூடாது. அதில் ஒரு ஜனநாயக மரபு தேவை. அவர்கள் பணிபுரியும் இடங்களில் எல்லாம் சமுதாயத்திற்கு எதிரான மனநிலையோடு பணிபுரியும் சூழலை உருவாக்கி விடக்கூடாது. அவர்களை எச்சரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

‪#‎தவறுகளை_நியாயப்படுத்தலாமா‬?

முகநூலில் பதிவிடும் கருத்துக்களில் நடுநிலை இருப்பதில்லை. நளினம் இருப்பதில்லை. மதிநுட்பம் இருப்பதில்லை. நாகரீகம் இருப்பதில்லை. சாதாரண விவாதங்கள் சண்டைகளாக மாறுகின்றன.

ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டால், ‘அந்த ஆர்.எஸ்.எஸ்.காரன் அப்படி எழுதுகிறான். அதனால் அவனுக்கு அப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

தங்கமும், பித்தளையும் சமமாகுமா? ஓடையும், சாக்கடையும் ஒன்றாகுமா? நீங்களும் அவர்களும் ஒன்றா? அவர்கள் செய்யும் அதே தவறை நீங்களும் செய்யலாமா?

அந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை அழகிய கருத்துக்களால் வெல்லத் தெரியவில்லை. ஆணித்தரமான வாதங்களால் தனிமைப்படுத்த தெரியவில்லை. அவரை பொதுமக்களுக்குமத்தியில் அம்பலப்படுத்த தெரியவில்லை. மாறாக காது கூசும் வார்த்தைகளால் திட்டுகிறார்கள். பதிவுகளைப் பார்க்கும் பொதுவானவர்கள், நமக்கு ஆதரவாகப் பேசும் நிலை மாறி ‘இரண்டு பேர் மீதும் தவறு இருக்கிறது’ என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.

"நபியே... மென்மையையும், மன்னிக்கும் தன்மையையும் மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!" என திருக்குர்ஆன் (7:199) இறைவன் அறிவுறுத்துகிறான்.

இதைப் புரியாத சில அறிவீனர்களின் ‘கருத்து அராஜகத்தால்’ முஸ்லிம் சமுதாயத்தின் மென்மைத்தன்மையும், மன்னிக்கும் பெருமனமும் மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

‪#‎விமர்சனமும்_நாகரீகமும்‬

விமர்சனங்களில் பொறுப்புணர்வு தேவை. அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்ச்சிகளையும் படுகேவலமாக விமர்சிக்கிறார்கள். இது சமூக நல்லிணக்கத்திற்காக நமது முன்னோர்கள் ஏற்படுத்திய ஒரு வழிகாட்டலாகும். இது பிடிக்கவில்லையென்றால் நாகரீகமான கருத்துகளை எடுத்து வைக்கலாம். ஆனால் இழிவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வருகின்றன. அந்த தலைவர்களிடமும் அதன் தொண்டர்களிடமும் எத்தகைய எதிர்விளைவுகளை மனதில் ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவில்லை.

நபிகள் நாயகம் பின்வருமாறு கூறினார்கள்:-

"ஒரு இறை நம்பிக்கையாளர் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ள மாட்டார். கரடுமுரடாக பேசமாட்டார்" என்றார்கள்.

ஒருவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு கேள்வியை வைத்துவிட்டால், அவர் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பதிலளிக்க முயல்வதில்லை. அதுபோல சல்மான்கான், குஷ்பு போன்றோர் முஸ்லிமா? இல்லையா? என்ற தேவையற்ற விவாதம் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. அலட்சியப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

பாஜகவின் தலைவர்களின் வன்முறைக் கருத்துகளுக்கு பதிலடி என்ற பெயரில் அவர்களை விலங்குகளோடு ஒப்பிடுவதும், கேவலமாக சித்தரிப்பதும் எத்தகைய நியாயம்? கோபம் அறிவை மறைக்கிறதா? அவர்கள் செய்யும் அதே இழிவான வழிமுறைகளை நாமும் செய்ய வேண்டுமா?
அக்கட்சியின் பெண் தலைவர்களின் வன்முறைக் கருத்துக்களை நாகரீகமாக கண்டிக்கலாம். ஆனால் அவர்களை தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தலாமா? கேவலமாகத் திட்டலாமா?
பொங்கும் உணர்ச்சி மனசாட்சியை வெல்லலாமா?
இது சமுதாயத்திற்கு எப்படி நன்மையைப் பெற்றுத்தரும்? அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இப்படியா எதிர்வினையாற்றச் சொன்னார்கள்? கோபம் அறிவை மறைக்கலாமா?

‘அவர்கள் கோபத்தை மென்று விழுங்குவார்கள்; மக்களை மன்னிப்பார்கள்’ என இறைவன் திருக்குர்ஆனில் (3:134) அறிவுறுத்துகிறான்.

‘சண்டையில் வெல்பவன் அல்ல வீரன்; கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்’ என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பெரும்பாலும் இதுபோன்ற பொறுப்பில்லாமல் செயல்படுபவர்கள் பற்றி ஆய்வு செய்தால், அவர்களில் பெரும்பாலோர் களப்பணிகளில்/நேரடி சமுதாயப் பணிகளில் ஈடுபடாதவர்கள் எனத் தெரிய வருகிறது.

அவர்கள் தூரத்தில் இருந்து எறியும் ஒரு கல், சமுதாயத்தின் மீது பாறாங்கல்லாக விழுகிறது என்பதை எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை.

‪#‎மனசாட்சியோடு_சிந்திப்போம்‬

மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒருவகையான மன அழுத்தத்தில் இருக்கிறது. அதற்கு சரியான உளவியல் சிகிச்சை தேவை. தாங்கள் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சிலர் கருதுகிறார்கள். பலர் இக்கருத்தை திணிக்கிறார்கள். இது நியாயமல்ல.

தமிழகத்தில் திராவிட இயக்கவாதிகளும்,தமிழ்த் தேசியவாதிகளும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினரின் தோழமை சக்திகளாகவும் பணிபுரிகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால்தான் இங்கு பாஜகவால் ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்க முடியவில்லை.

குஜராத் கலவரத்திற்கு எதிராக இன்றும் போராடும் தீஸ்தா செடில்வாட் ஒரு பார்சி பெண்மணி. குஜராத் கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு என தொடர்ந்து போராடும் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டும், சங்பரிவார தீவிரவாதத்தை தோலுரித்த தியாகி ஹேமந்த் கர்கரேயும், பம்பாய் கலவரத்திற்கு பால்தாக்கரேயைக் கைது செய்ய வேண்டும் என அறிக்கை அளித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவும், முஸ்லிம்களின் வாழ்வியல் துயரத்தை அம்பலப்படுத்திய நீதியரசர் சச்சாரும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த ரங்கநாத் மிஸ்ராவும் பிராமணர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

சங்பரிவார் மதவெறிக்கு எதிராக கருத்துப்போர் நடத்தும் 90 சதவீத பத்திரிக்கையாளர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான் என்பதையும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும், தலித் கட்சிகளும் குரல் கொடுப்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், பொது களங்களிலிருந்து நம்மை நாமே தனிமைப்படுத்தி சிந்திப்பது அரசியல் அறியாமையாகும்.
இந்தியாவில் பன்முக சமூகத்தோடு கலந்து நின்றுதான் மதவெறி சக்திகளை வீழ்த்த முடியும் என்பதை உணரவேண்டும். இதைப் புரிந்துகொண்டு, நேர்மையான கொள்கையின் அடிப்படையில் சமூக இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிய வேண்டும்.

இல்லையெனில், ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டங்கள் வலுப்பெற பொறுப்பற்ற இளைஞர்கள் தங்களையும் அறியாமல் உதவி செய்த வரலாற்றுத் தவறு ஏற்பட்டுவிடும்.எச்சரிக்கை!

இவண்
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

புதன், 30 ஜூலை, 2014

சட்டமன்றத்தில் மின்னணு கழிவுகள் குறித்து ஜவாஹிருல்லா MLA கேள்வியும் அமைச்சரின் பதிலும்...



முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா:  மின்னணு கழிவுகள் குறித்து எனது கேள்வியும் அமைச்சரின் பதிலும் துக்ளக் வார இதழின் ஆதங்கமும்

கடந்த ஜுலை 25 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மின்னணுக் கழிவுகள் குறித்து நான் எழுப்பிய கேள்வியும் அதற்கு சுற்றுச் சூழல் அமைச்சர் அளித்த பதிலையும் இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

பேராபாத்துகளை தாங்கி நிற்கும் மின்னணுக் கழிவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் நான் எழுப்பிய இந்த கேள்வி குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இது குறித்து இந்த வாரம் துக்ளக் இதழில் (6.8.2014) தனது ஆதங்கத்தை வெளிப்பபடுத்தியுள்ளது.

துக்ளக் இதழில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்யும் 'தோஸ்த்' (மூத்த பத்திரிகையாளர் ரமேஷ்):
'பொதுவாகவே, சபையில் அமளியில் ஈடுபட்டால், மீடியாவில் கிடைக்கிற விளம்பரம், ஆக்கபூர்வமாகப் பேசுகிறவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தொடர்ந்து நிலவும் ஒரு குறை. உதாரணமாக, மின்னணுப் பொருட்களின் கழிவால் (e waste) ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கேள்வி நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எழுப்பிய வினா, முக்கியமான ஒரு பிரச்னை சம்பந்தப்பட்டது. செய்திகளில் இப்படிப்பட்ட விஷயங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி இது தொடர்பாக எனது கேள்விகளும் அமைச்சரின் பதில்களும்
மின்னணுக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசினுடைய சுற்றுச்சூழல் வனத் துறை அறிவிக்கையின்படி மின்னணுக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011ல் வெளியிடப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 12-9-2013ல் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக மாண்புமிகு உறுப்பினரு க்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
கணினிகள், மடிக்கணிளிகள், இன்னிசைக் கருவிகள், செல்போன்கள், கேமராக்கள், பென்டிரைவ் போன்றவை மின்னணு கழிவாக ஈவேஸ்ட் ஆக கருதப்படுகின்றன. மும்பை, புதுடெல்லி, பெங்களுருக்கு அடுத்ததாக சென்னையிலே ஆண்டொன்றுக்கு 47000 டன் மின்னணு கழிவுகள் கிடைப்பதாக ASSOCHAM(Associated Chamber of Commerce and Industries ) அறிவித்திருக்கிறது. இதில் டிவிக்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் 26183 டன்கள் சென்னையில் கழிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகளிலே நச்சுத் தன்மையுள்ள காரியம், பாதரசம், குரோமியம், போன்ற உலோகங்கள் இருக்கின்றன. இந்த உலோகங்கள் கழிவாக ஆகும்போது மனிதர்களுக்குப் புற்று நோய் நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்னையும், நீரையும், காற்றையும் மாசுபடச் செய்கிறது. மாண்புமிகு அமைச்சர் குறிப்பிட்டது போல E-Waste (Management and Handling ) Rules 2011 படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக் கூடியவர்களுக்கு உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்புடைமை அதாவது Extended Producer Responsibility என்று ஒன்று இருக்கிறது. இந்த விதியின்படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் அது பயன்பாடு முடிவடைந்தபிறகு அதற்கானCollection Centre சேகரிப்பு நிறுவனம் அமைக்கவேண்டும்.

அதேபோன்று, dismantling அதை பிரிப்பதற்கும் மற்றும் recycle மறுசூழற்ச்சி செய்வதற்கும் அந்த விதிகளிலே இடம் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத் துவதற்கு தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று வினவுகின்றேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,E-Waste என்று சொல்லக்கூடிய மின்ணணு கழிவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும்பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற் சாலைகளுக்கு மின்னணு கழிவுகளை சேகரித்து பிரித்தெடுப்பதற்காக, மின்னணு கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன் கீழ் உரிய அனுமதி வழங்கிவருகிறது.

இதுவரை மேற்கண்ட விதியின் கீழ் 16 தொழிற்சாலைகளுக்கு மின்னணு கழிவு உதிரிபாகங்களை தனித்தனியாக பிரித்தெடுத்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதற்கும், அங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்துர் அருகிலே சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள திருவாளர் TES-AMM (India) Private Limited என்ற தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெற்று மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மின்னணு கழிவுகளை பொதுமக்களிடம் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சேகரித்து மறுசுழற்சி நிலையங்கள் மற்றும் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு 7 சேகரிக்கும் மையங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலே, ஒவ்வொரு வார்டிலும் இதுபோன்ற மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக வேண்டி சுற்றுச்சூழல் துறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தி கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உள்ளாட்சித் துறையின் மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலே குப்பைகளை பிரித்தெடுக்கும்போது அந்தக் குப்பையெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகவும் மின்னணுக் கழிவுகளை தனியாகவும், பிரித்தெடுக்கின்ற வகையிலே அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் உள்ளாட்சிகளுக்கு பின் என்று சொல்லக்கூடிய தனித்தனிப் பெட்டிகளை வழங்கும் வகையில் பேரூராட்சி பகுதிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மாண்புமிகு உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

குமராட்சி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு-சட்டமன்றத்தில் மமக…!



குமராட்சி பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு செய்யப்படுவது தொடர்பாக சட்டமன்றத்தில் குரலெழுப்பிய மமக…!

இன்று 30-07-2014 தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வணிக வரித்துறை, முத்திரைத் தாள் பத்திரப் பதிவுத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகளில் பேசுகின்ற வாய்ப் பளித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொண்டு,

மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக தோல் தொழிற்சாலையின் ஏற்றுமதியாளர்களுடைய வாட் ரிபண்ட் தொகை ஓராண்டுக்காலமாக இதுவரையிலும் திரும்பத் தராமல் காலம் கழித்து வருகிறார்கள்.

ஆகவே அவர்களுடைய வாட் ரீப்ண்ட் தொகையை உடனடியாக திரும்பத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து மூன்று மாதங்கள் NIL refund submit பண்ணினால் RC cancel செய்யப்படும் என்ற ஒரு சூழல் இருக்கிறது. அதையும் இரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்- மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா.

ஞாயிறு, 18 மே, 2014

200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது - எம். தமிமுன் அன்சாரி


மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் பணநாயகம் வென்றிருக்கிறது. 200 ரூபாய்க்கு வாக்குகளை விற்கும் அரசியல் அவலத்தில், ஜனநாயகம் புதைகுழிக்குள் சரிந்திருக்கிறது.

சூறைக் காற்றில் சந்தன மரங்களும் சாய்வதைப் போல, மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. எமது தியாகமிக்க பயணத்தில் எவ்வளவோ சோதனைகளை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றிலிருந்து வெகு விரைவிலேயே மீண்டிருக்கிறோம்.

இந்த தோல்வி எங்களை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால், களத்திலிருந்து அகற்றி விடாது. காரணம், நாங்கள் லட்சியத்திற்காகவும், கொள்கைகளுக்காகவும் களமாடுபவர்கள். எங்களை மெழுகுவர்த்திகளாக உருக்கிக் கொண்டு பணியாற்றுவதில் எப்போதுமே திருப்தியடைபவர்களாக நாங்கள் இருக்கிறோம். எங்கள் உயரிய லட்சியங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தோல்வி குறித்து முழுமையாக ஆராய்வோம்.

மயிலாடுதுறையில் எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்விகள் சகஜமானவை என்ற அடிப்படையில் இதனை ஏற்றுக் கொள்கிறோம்.

- எம். தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

செவ்வாய், 25 மார்ச், 2014

வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாத மமக வேட்ப்பாளர் ஹைதர் அலி !



தமிழக அரசியல் வாழ்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய மனிதநேய மக்கள் கட்சி வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாமல் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும், ஆம்பூர் தொகுதி வேட்பாளர் அஸ்லம் பாட்சா அவர்களும் வாக்காளர்களுக்கு வணக்கம் சொல்லாமல் கையை மட்டும் சைகை செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்கள்.

அதேபோல தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் மயிலாடுதுறை தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் S. ஹைதர் அலி அவர்களும் வணக்கம் சொல்லாமல் கையை மட்டும் சைகை செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

காலில் விழுந்தும், கரத்தை பிடித்து கெஞ்சியும் வாக்குகள் சேகரித்து வெற்றிபெறும் வேட்பாளர்களை பார்த்து பழகிய மக்களுக்கு மயிலாடுதுறை தொகுதியில்இது வித்யாசமாக இருக்ககூடும்.

ஆனால், இந்த வேட்பாளர் மக்களிடம் ஓட்டுகேட்க வரும்போது தன்நெஞ்சில் கைவைத்து என் மனசாட்சி உறுதியின் கூற்றில் உங்களிடம் ,உங்களுக்காக உழைக்க பாடுபடுவேன் என்று முகமன் சைகையில் ஸலாம் கூறி அல்லவா வாக்கு கேட்கிறார்....

இது போற்றத்தக்கதல்லவா ..?

வெறும் ஏமாற்று கலாச்சாரத்தில் மக்களை மூழ்க வைத்து போலியாக நாடகமாடி தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்கி கொண்டு வெற்றி பெற்றவுடன் மாய பிறவியாக மாறி மறைந்துபோகும் மனிதர்கள் மத்தியில்...

இஸ்லாமிய கோட்பாட்டின்படி இயங்கி தன்நிலை மாறா மக்கள் பிரதிநிதியாக ஹைதர் அலி விளங்குவார், தொகுதி மக்களின் தீரா பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக எதிரொலித்து செயல்படுவார்.

வெறும் கூழை கும்பிடுகளால், காலில் விழுந்து ஓட்டுகேட்பவர்களை ஒதுக்கிவிட்டு, உண்மையாக உள்ளார்ந்த மனசாட்சியுடன் தொகுதி நலன்களுக்காக உழைக்க தயாராக இருப்பவருக்கே வாக்களிக்க வேண்டும்.

- sangai riduvan

வியாழன், 16 ஜனவரி, 2014

ஆம்பூர் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுதிய மமக எம்.எல்.ஏ


ஆம்பூர் ஜன.15 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா MLA அவர்கள் கூறியதாவது தொகுதி மேம்பாட்டு நிதி2013-14ம் ஆண்டில் இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் 199.70இலட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார், 

மேலும் அவர்களின் தொடர் முயற்சியால் ஆம்பூர் தொகுதியில் ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம், சார்நிலை கருவூலம், பத்திரப் பதிவு அலுவலகத்துக்கான புதிய கட்டிடம், வட்டாசியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம், மின்னூர் ஆரம்ப சுகாதாரம் நிலையம், மாதனூர் ஒன்றியம், அரிமலை-கொல்லகுப்பம், துணை வட்டார போக்குவரத்து அலுவலகம், பல்வேறு கிராமங்களில் தார் சாலைகள், பல்வேறு புதிய வழித்தடஙகள் பேருந்து வசதிகள், என ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் முயற்சியாள் தமிழக முதல்வர் அரிவித்தார்கள்.

மேலும் ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாதனூர் காவல் நிலையம், மின்னூர் - வடகரை ஆறுறுப்பாலம், ஆம்பூர் ஆணைமடகு பெரிய தடுப்பணை கட்டுவது, அகரம்சேரி-மேல் ஆலத்தூர் ஆறுறுத்தரை பாலம், ஆம்பூர் அரசு மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், என பல்வேறு பணிகளை தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

சனி, 11 ஜனவரி, 2014

மதவாத சக்திகளை முறியடிப்போம்...



இந்தியா போன்ற பல் சமூக மக்கள் வாழும் நாட்டில் எந்த சமூகமும் தனித்து அரசியல் களம் கண்டு வெற்றி ஈட்ட முடியுமா ? அவ்வாறு யாராவது நினைத்தால் அது நிச்சயம் அது பகல் கனவாகவே இருக்க முடியும். விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக களமாடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட சமூக நீதிக்காவலர் வி பி சிங் அவர்களும் தனித்த வெற்றியை பெற முடியவில்லை.

நாங்கள்தான் விடுதலை வாங்கி கொடுத்தோம் என நீட்டி முழக்கிய காங்கிரஸ் கட்சிக்கு கூட முதல் தேர்தலில் பெரும்பான்மையை சென்னை மாகாணத்தில் பெற முடியவில்லை என்பதும் அன்றைய காங்கிரஸ் முதல்வர் ராஜாஜியின் தூக்கத்தை கெடுத்த இடது சாரிகள் குறித்தும் வரலாற்று ஏடுகள் பதிவு செய்துள்ளன.அவ்வளவு ஏன் நாடு முழுவதும் மக்களை பிளவு படுத்தி நச்சு சிந்தனையை பரப்பி வலுவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ள ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் வாரிசான பாஜக கூட தனித்து வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது.

சிறுபான்மையினரின் வலுவான வாக்கு வங்கிகளை தன்னகத்தே கொண்டு இருந்த , திமுக திருனாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கொல்லைப்புற வழியாக பெற்று அதிகாரத்தை சுவைத்த கட்சி கூட தாங்கள் தனித்து சாதிப்போம் என கூறவேயில்லை .ஒன்று சேர்ந்தே சாதிக்க முடியும். இதுவே உண்மை நிலை. இந்த யதார்த்த நிலையைபுரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக ம ம க போன்ற ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சிக்கு அட்வைஸ் செய்கிறோம் பேர்வழி என சில புண்ணிய வான்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த நல்லவர்களுக்கு ஒரு வேண்டுகோள்  நீங்கள் பதிவிடும் செய்தியை அனைவரும் கவனிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பதிவு செய்யுங்கள் .

உங்கள் பதிவுகள் உங்கள் அரசியல் அறியாமையை வெளிப்படுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது. சிந்தித்து பதிவு செய்யுங்கள்.

சில பேர் போடும் நிலை தகவல்கள் சிறு பிள்ளை தனமாக இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மில் சிலர் போடும் பதிவுகள் மத வாத சக்திகளுக்கு ஆதரவாக மாறி வோட்டுக்கள் எதிர் முகாமுக்கு போய்விடும் நிலையை ஏற்படுத்தி விடகூடாது. மதவாத சக்திகளை முறியடிப்போம்.

- அபுசாலிஹ்

நாடாளுமன்றத் தேர்தல் : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு...



சென்னை,ஜனவரி.10 : தி.மு.க கூட்டணிக்கு ம.ம.க ஆதரவு தெரிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம், நேற்று காலை, எழும்பூர் சிங்கப்பூர் பிலாசாவில் நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளி, 10 மே, 2013

வெளிநாட்டிலே வாழக்கூடிய தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்: சட்டமன்றத்தில் மமக கோரிக்கை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnA27ZnYXWSukuo5mPetN0pMwfSOuwKFZSilXsAQdgNAGlQiwuYNOOwhB_C8azRn32wCcHLaZXixIjnqnbN1gOPS2rjdd6ns8WvoQkfX8nCnKnxSR7bmOwUzYV3Hbx7Gy-B1v5w5SAMlU/s1600/ramnad-jawahirullah.jpg

9.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:

அதிமுக அரசு வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் மிக முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை அயல்நாட்டிலே வாழக்கூடிய, அயல்நாட்டிலே வாழக்கூடிய என்று சொல்வதைவிட, அயல் நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தமிழகத் தொழிலாளர்களுடைய பிரச்சினை பற்றி இந்த அரசு நிச்சயமாக, சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் சில கருத்துகளை என்னுடைய ஆலோசனைகளாக நான் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

 2010-ல் மத்திய அரசாங்கத்தினுடைய வெளிநாடு இந்திய விவகாரத்திற்கான அமைச்சகத்தில் இணைந்திருக்கக்கூடிய Research Unit on Inter National Migration வெளிநாட்டிற்குச் செல்லக்கூடியவர்கள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேரா. எஸ். இருதயராஜன் என்பர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்விலே, உண்மையிலே நான் வியக்ககூடிய ஒரு புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலே இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளிநாட்டிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பக்கூடிய தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டிருக்கின்றார்கள், அதிலே முதலாவதாக வருவது கேரள மாநிலம், 42,922 கோடி ரூபாய் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த மாநிலத்திற்க அனுப்புகிறார்கள். அதற்கடுத்த நிலையிலே இருப்பது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மாநிலங்கள் இல்லை. கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ரூ. 41,400 கோடியை செலுத்தியிருக்கின்றார்கள். மூன்றாவது இடத்திலே ஆந்திரா மாநிலம் 28,550 கோடி எனவே வெளிநாட்டில் பணியாற்றக்கூடிய தமிழர்களின் நலனை பேணி பாதுகாப்பதிலே நிச்சயமாக நாம் கூடுதல் அக்கறை செலுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 இதிலே என்ன பிரச்சினை என்றால் அதிகாரப்பூர்வாமாக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று வேலையில அமர்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் எத்தகை பேர் என்ற புள்ளிவிவரம் இருக்கின்றதா? என்றால் இல்லை, இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக, தொழிலாளர்களாக விசா பெற்று செல்லக்கூடியவர்களுடைய புள்ளிவிவரத்தை கணக்கிடக்கூடிய பணியை தமிழக அரசு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக வளைகுடா செல்லக்கூடிய தமிழர்கள் தங்களின் விசா, பணிக்காலம், வேலை செய்ய போகும் நிறுவனம், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய முழு தகவல்களையும் முதலில் தமிழக அரசு அளித்து அதை துôதரகம் பரிசோதித்தப் பிறகுதான் இவர்கள் நாட்டைவிட்டே வெளியே செல்லவே அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அரசு நாடுகளாக இருக்கட்டும் அல்லது மலேசியவாக இருக்கட்டும். தாங்கள் கடன் பெற்று, பல்வேறு சுமைகளைப் பெற்று விசா எடுத்துச் சென்று, அங்கே மிக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, மிகப் பெரிய துயரங்களைப் படக்கூடிய தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய நலன்களை காப்பாற்றுவது நிச்சயமாக நம்முடைய அரசாங்கத்தின் கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக மிகப் பெரிய விழிப்புணர்வை நடத்த வேண்டும். வெளிநாட்டிலே உள்ள தமிழர்கள் வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள இடர்பாடுகள் என்ன? அங்கே அவர்கள் நடந்துக்கொள்ளக்கூடிய முறைகள் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரபு நாடுகளுக்கும், சில தூர கிழக்கு நாடுகளுக்கும் செல்லக்கூடிய தொழிலாளர்கள் துயரங்களிலே மாட்டிக் கொள்ளும்போது அவர்களுக்கு அங்கேயிருக்கக் கூடிய நம்முடைய 100க்கு 90 சதவீதம் நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கு அங்கேயிருக்கக்கூடிய வெளிநாட்டு தூதரங்கள் சரியான முறையிலே உதவிகளை செய்வதில்லை. அமைப்புச்சாரா அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் நம்முடைய தமிழக அமைப்புகள் எங்களுடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட அவர்களுடைய துயரங்களை நீக்குவதற்கு நாங்கள் ஏதாவது பணிகளைச் செய்கின்றோம். இதற்குப் பதிலாக இங்கே ஒரு Distress Cell அதாவது அவர்கள் துயரத்தில் இருக்கும்போது இமெயில் வழியாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தங்களுடைய தகவல்களைக் கொடுத்து உடனே நம்முடைய தமிழக அரசு அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து அப்படி வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்றக்கூடிய பணியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது சவூதி அரேபியாவிலே ஏராளமான, இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுவும் கேரளாவிற்கு அடுத்த நிலையிலே இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். அங்கே அந்த நாட்டு அரசாங்கம், அந்த நாட்டிலே இருக்கக் கூடியவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக நிதாகத் எனற ஒரு திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலமாக நம்முடைய இந்திய நாட்டைச் சார்ந்த ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடைய மறுவாழ்விற்காகவும் இந்த அரசு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

2011-ல் தமிழக அரசு தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்கள் நல்வாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. தமிழ்நாட்டிற்கு வெறியே பிற மாநிலங்களிலே வாழக்கூடிய பிற மாநிலங்களிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும், அதேபோல, இந்தியக் கடல் எல்லைக்கும் அப்பால் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய எல்லா நலன்களையும் பாதுகாக்கக்கூடிய வகையிலே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தினுடைய பிரிவு 10 லே தமிழ்நாடு அயல் நாட்டுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிபிடப்பட்டிருக்கின்றது. அந்த நல வாரியத்தை விரைவிலே இந்த அரசு அமைப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சில நேரங்களிலே அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்கள் ஏதாவது தண்டனை பெற்றிருப்பார்கள், அதற்குபிறகு அவர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள், வழக்கமாக அவர்களுக்கு டிக்கெட்டை மும்பை வரைதான் கொடுக்கிறார்கள். மும்பைக்கு இரவிலே வந்து இறங்கிவிட்டு, தாயகத்திற்கு வருவதற்குக் கையிலே காசில்லாமல் துயரப்படக்கூடிய தமிழகத் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள், எனவே கேரளாவில் வெளிநாட்டிலே வாழக்கூடிய அந்த மாநிலத்தவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம் இருக்கின்றது. முழுக்க முழுக்க நான் சொன்ன அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையிலே அந்த அமைச்சகம் செயல்படுகிறது. எனவே வெளிநாட்டிலே வாழக்கூடிய நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 10 ஏப்ரல், 2013

திரைப்படங்களுக்கு வரி விதிக்கவேண்டும்: ம.ம.க. கோரிக்கை




காரைக்கால்: புதுச்சேரி அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழ் திரைப்படங்களுக்கு வரி விதிக்கவேண்டும் என காரைக்கால் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலர் நெய்னா முஹம்மது புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: "புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அகிய இருவருக்கும் இடையே, யார் பெரியவர் என நடக்கும் பிரச்சனையால், அரசு கடும் நிதி நெடுக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட நிதியில்லை. அவர்களின் சேமிப்பு பணத்தை எடுக்க கூட முடியவில்லை.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் அரசு நிறைவேற்றியது. அந்த நான்கு மாதங்களுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டி, பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மக்களுக்கு தேவையான கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளையும், மக்களுக்கு வழங்கவேண்டி பல்வேறு அரசு துறைகளுக்கு கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளையும் திரும்ப பெற்றுள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியது.

புதுச்சேரியில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க, வீட்டுவரி, மின்சார வரி, நிலங்களுக்கான மதிப்பு கூட்டு வரி, பஸ், பால் கட்டணம் என அனைத்து வரியையும் உயர்த்திய அரசு, பணக்காரர்கள் கையில் உள்ள பெட்ரோல் பங்க் வரியை இதுநாள் வரை வசூல் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, தமிழகத்தோடு போட்டி போடும் வகையில், அவர்களை பின்தொடர்ந்து, தமிழ் திரைப்படங்களுக்கு புதுச்சேரி அரசு தொடர்ந்து வரி விலக்கு அளித்து வருவது தேவையற்ற ஒன்று. எனவே, புதுச்சேரி மாநிலமெங்கும் ஓடும் தமிழ் திரைப்படங்களூக்கு முறையான வரி விதிக்கவேண்டும். மேலும், புதுச்சேரியில் எடுக்கப்படும் தமிழ்திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்களுக்கு குறிப்பிட்ட வரி விதிக்கவும் முன்வரவேண்டும்".

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதன், 27 மார்ச், 2013

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQYpeZrukLTEo9tMcwtmsJX6hZx9fLKEG8YUCf5JuBGlOLY7X9C

எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகும்.

அது நின்று; நிதானித்து; யோசித்து; ஒரு மனிதனை நீண்டகால சிந்தனைப் போராட் டத்திற்கு வழிவகுக்கும்.

இன்று சமூக இணையதளங்கள் வந்தபிறகு அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களை எழுத்தாளர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாய்ப்பை இணையதளங்களும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் வழங்குகின்றன.

ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையில் எழுதும் கருத்துகள் போய்ச் சேரும் வாசகர் எண்ணிக்கையை விடக் கூடுதலான இலக்கை இவைகள் அடைய வழிவகுக்கின்றன. அதுவும் விரைவாக!

இந்தியாவில்; தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு காலத்தில் தங்களது கருத்துக்களைப் பரப்பவும், வாதிடவும், தவறான கருத்துகளுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகளும், வழிகளும் இல்லையே என ஏங்கியது.

அந்த ஏக்கத்தை இணைய தளங்களும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றன. படித்தவர்களும், வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

இதில் ஆறுதல் அடையும் அதேநேரம், துயரமடையச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில இளைஞர்கள் உணர்ச்சிப் போக்கில் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தாங்கள் ஏதோ ‘முஸ்லிம் நாடுகளில்’ வாழும் மன நிலையிலும் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தங்களது கருத்துக்களை முஸ்லிம்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற மனநிலையில் பதிகிறார்கள். சிலர் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்கும் வகையில் பொறுப்பற்றத்தனமாக கருத்துக்களைப் பதிகிறார்கள்.

இது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பண்பாடு இல்லாமல், நாகரீகம் இல்லாமல், ஒரு உன்னதமான சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பொறுப்பு இல்லாமல் சிலர் வெளியிடும் கருத்துக்களும், ஆவேசமானப் பதிவுகளும் இதை கவனிக்கும் பிற சமூக மக்களை மட்டுல்ல; சொந்த சமூக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இவர்களிடம் பக்குவம் இல்லையா? பண்பாட்டுடன் கூடிய அறிவு இல்லையா? என பிறர் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயக்க வேறுபாடுகள் & மோதல்கள்

தலைவர்களின் மீதான எதிர் கருத்துக்கள்

பிற சமூகங்களைப் பற்றிய மதிப்பீடுகள்

அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங் கள்

பொது அரங்கில் நடைபெறும் சம்பவங்கள்

சர்வதேச நிகழ்வுகள்

போன்றவை குறித்து சிலர் பக்குவமில்லாமல் எழுதும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

நாம் பன்முக சமூகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதையும், நம்மைச் சுற்றிலும் நல்லெண்ணம் கொண்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை யும், நாம் பதியும் கருத்துக்கள் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுதலாக உருவாக்கி விடக் கூடாது என்பதையும் மறந்து விடுகிறார்கள். அல்லது இதைப் புரியாமல் வாழ்கிறார்கள்.

அநாகரீகமான சொல்லாடல்களும், முரட்டுத்தனமான விமர்சனங்களும்; நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆதரவுகளை ஒரு சமூகமே இழக்க வேண்டிய சூழல் உருவாவதை அப்படிப்பட்ட சகோதரர்கள் உணர வேண்டும்.

தாலிபான்கள் விவகாரமாக இருக்கட்டும்; திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகளாகட்டும்; விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களாக இருக்கட்டும்; சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி ரிசானா விவகாரமாக இருக்கட்டும்; சமீபகாலமாக ஃபேஸ் புக்கில் பரிமாறப்படும் எதிர்வினைகள் முஸ்லிம் சமூகத்திற்கு வலுவான ஆதரவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெருவாரியான ஆதரவாளர்களை எதிர் முகாமுக்கு தள்ளியிருக்கிறது என்ற பொதுவான கருத்து குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எதிரிகளிடம் விவாதம் புரியுங்கள். ஆனால் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். நமது கருத்தை ஆழமாக வாதிடுங்கள். ஆனால் தரத்தைப் பின்பற்றுங்கள்.

அறிவை உணர்ச்சி வென்றுவிடக் கூடாது. கோபம் பண்பாட்டை குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்கள் எல்லை மீறிவிடக் கூடாது. திருக்குர்ஆன் ‘உண்மையைப் பேசுக (3:17), நேர்மையாகப் பேசுக (33:70), நீதமாகப் பேசுக (6:152), நல்லதைப் பேசுக (2:83), மிக அழகியதைப் பேசுக (17:53), மரியாதையாகப் பேசுக (17:23)’ என மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இதை சற்று எண்ணிப் பாருங்கள்.

நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளின் மனப்போக்கை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். பதிலடி களைக் கூட நிதானமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் பதியுங்கள்.

மாறாக, நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளுக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துவிடக் கூடாது. நமது நியாயங்களை பலமிழக்க செய்துவிடக் கூடாது.

சமூக ஊடகங்களும், இணைய தளங்களும் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது என்பதையும், நமது கருத்துக்கள் நம் சமூகத்தின் தரத்தை மதிப்பிடுவதாகவும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழாயடிச் சண்டைகளை; உள்விவகாரங்களை; தனிநபர் தாக்குதல்களை; மூன்றாம் தர எழுத்துக் களை தயவு செய்து இணையங்களிலும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடாது. கோபத்தோடும், அவசரப் பட்டும், பொறுப்பில்லாமலும் கருத்துக் களைப் பதியாதீர்கள். பல சமூகத்தினரும் நம்மை கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை, கண்ணியம், தொலை நோக்கு, சமூகப் பொறுப்பு, மன்னிப்பு என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஊடக உலகில் பணியாற்ற வேண்டியுள்ளது.

தனது சிறிய தந்தை ஹம்ஸாவைப் படு கொலை செய்த ஹிந்தாவை மன்னித்த மானுட வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தை உஹது போர் களத்தில் எதிர்த்த காலித் பின் வலீத் அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று பல போர்களில் நபிகள் நாயகத்தோடு அணிவகுத்தார்கள்.

காலமெல்லாம் நபிகள் நாயகத்தை எதிர்த்தே வாழ்ந்திட்டவர் அபுஜஹல். அவரது மகன் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தோடு பணியாற்றினார்.

இந்த வரலாறுகளுக்கு உரிய சமூகத்தின் உறுப்பினர்கள் நாம் என்பதை உணருங்கள்.

உயரிய அணுகுமுறைகள் பெரும் வெற்றி களைத் தருகின்றன. நாம் சார்ந்த சமூகத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.

கருத்துக்களைப் பரப்பும் ஊடக உலகில் கவனமாகப் பணியாற்றுங்கள். நமது எழுத்துக் களால் ஏற்படும் நன்மைகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதைப் போலவே, நமது எழுத்துக்களால் ஏற்படும் விபரீதங்களுக்கும் நாளை மறுமை நாளில் விசாரணை உண்டு என்பதை உணருங்கள்.

நடுநிலையாக சிந்திப்பதும், நேர்மையாக செயல்படுவதும், உண்மையாக வாதிடுவதும் நமது இலக்கணங்கள் என்பதை மறவாதீர்கள்.

புதன், 6 மார்ச், 2013

தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/03/MMK-flag-1.jpg

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே போராடி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களும், தமிழகத்தில் ரயில்களும் ஓடாதவாறு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் மறைமுக ஆதரவளித்தார்.

அதேபோன்று, தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள், கடந்த 3.3.2013 அன்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியின் போது கோரிக்கை விடுத்தார்.

ஆகவே, அனைத்துலக தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழக அரசே கடையடைப்பு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

அன்புடன்
(பி.எம்.ஆர்.சம்சுதீன்)

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/09/MMK.jpg

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி:

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.

சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர்.
உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.

குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)

சனி, 2 மார்ச், 2013

பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டி வை.கோ-வின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம் - டாக்டர்.பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பங்கேற்பு!

http://www.inneram.com/images/inneram/in2013/March/mdmk%20public%20meet.jpg

பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டி, வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல்கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.

கடந்த பிப்ரவரி 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்திலிருந்து 2ம் கட்ட நடைபயணத்தை துவக்கிய வைகோ, 11 நாட்கள் 250 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு 28 ம் தேதி மறைமலை நகரில் நிறைவு செய்தார்.

https://lh5.googleusercontent.com/-rQEthrF1DFA/USjOhVn-1dI/AAAAAAAAT44/z68zNtNGQE8/s766/2013-02-23இதன் தொடக்க நிகழ்வில் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டார். 20/2/2013 அன்று புதுப்பட்டினம்(கல்பாக்கம்) வருகை தந்த வைகோ அவர்களை தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் வாழ்த்தி வரவேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். வைகோ தனது உரையில் தமுமுக மமக வின் மனிதநேயப் பணிகளை நெகிழ்ந்து பேசினார்.

இதையொட்டி மறைமலை நகரில் நடைப்பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று  நடைபெற்றது. இதில் ம.ம.க-வின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ  கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி,காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக வைகோ உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இலங்கை தூதரகம் முற்றுகை : மனித நேய மக்கள் கட்சியினர் 200 பேர் கைது...

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRoMJqpY1EN7s5h8YuwkH8uvpMe8gx05heBFJGyMuyi9VXjqpcg

சென்னை,பிப்.22 : சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மமக-வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர், மேலும் பிரபாகரன் மகனை பிடித்து வைத்து இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்தனர். 

ஐ.நா,வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர். தமிழர் உணர்வை புரிந்து கொண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இலங்கை தூதரக முற்றுகைக்கு ம.ம.க அழைப்பு!

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRbt-ziWtVMONB_Uhs-SUpczxrzRHNNvoC52rcwLDM3PpbxG_FV
இலங்கை ராணுவத்தால் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது. இன்று மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது.  மனிதநேயமுள்ள அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

சனல்- 4 இன் புதிய வெளியீடு 'நோ பயர் சோன்': அடுத்த மாதம் ஐநா பேரவையில் வெளியிடப்படும்!

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT05TrPcnURsyOayMbO4bDICglggOm4TlcWuwkL3_hbJG9r6mABmQ
“இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கெல்லம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், சனல்- 4 தொலைக்காட்சி அது குறித்து வெளியிட்ட காட்சிகள் தான் இலங்கை அரசை கடுமையான சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன.

போரின்போது 'தாக்குதல்கள் நடத்தப்படக் கூடாத பகுதிகள்' என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுபடுத்தும் வகையிலேயே படத்துக்கு “No Fire Zone” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் குறித்த பல புதிய காட்சிகள், புதிய செவ்விகள் மற்றும் போரின் பின்னணி குறித்த கூடுதல் விபரங்கள் இப்படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குனர் கெல்லம் மெக்கரே. சனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும். போர்க்குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அங்கே நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும்" என்றார் கெல்லம் மெக்கரே.

சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பது குறித்தும் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் குறித்தும் சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களை உருவாக்கவும் இந்தத் திரைப்படம் வழிகோலும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
\

பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!‏

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQbZJU10qNFKRMlhzbTwVsG6ui06e-5UAzzS19FyoMS6PrKAhKe
பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்தது. முல்லிவாய்க்காலும் முள்வெளி முகாம்களும் உலகம் உள்ளளவும் அதனை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இலங்கை சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேவ்ண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள்  கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பினும் அப்பாவித் தமிழனின் அழுகுரல் இந்த பூமிப்பந்தில் யாருக்கும் எட்டவில்லை. இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் தமிழர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

சானல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற பயங்கரங்களை அம்பலப்படுத்தியது. இருப்பினும் இலங்கை சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் அதே சானல் வெளியிட்ட புகைப்பட ஆவணம்  மனித மனம் கொண்ட அனைவரையும் கலங்க வைத்துள்ளயது, கதற வைத்துள்ளது. 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட விதம் இலங்கையின் இரக்கமற்றத் தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 

இன்னும் ஏன் இலங்கை, போர்க்குற்ற விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. ராஜபக்சேயும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேயும் இன்னும் ஏன் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை என்ற வினாக்கள் சர்வதேச அளவில் எழும்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா முழுமுயற்சி எடுக்க வேண்டும். மனிதகுல விரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும்.

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

அரசிதழில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு: மத்திய அரசின் முடிவு பாராட்டுக்குரியது‏.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTMg8mitRUJmIhYFh-Q8EhYm5C_pemX50vnvxNBQLJsRfOMWuDl
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை, உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.

இம்முடிவு தமிழக அரசின் உறுதியான நடவடிக்கைகளுக்கு கிடைத்த  மகத்தான வெற்றியாகும். மத்திய அரசின் நடவடிக்கை காவிரிப் பாசன விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கர்நாடக அரசு இம்முடிவை அமல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்