பாப்ரி வளாகத்தை முஸ்லிகளிடம் ஒப்படையுங்கள் : இங்கிலாந்து வாழ் இந்திய முஸ்லிம்கள்... ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பாப்ரி வளாகத்தை முஸ்லிகளிடம் ஒப்படையுங்கள் : இங்கிலாந்து வாழ் இந்திய முஸ்லிம்கள்...

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQehOvsHy2-eHwPMg06duL5J4zx80O5nx41QSZT2y9usiVc-4e0cA 
லண்டன்: இந்திய அரசு பாப்ரி பள்ளி வளாகத்தை உடனடியாக முஸ்லிம்களிடம் ஒப்படைத்து அவர்களே மஸ்ஜிதை மறு நிர்மானம் செய்ய அனுமதிக்க வேண்டுமென இங்கிலாந்து வாழ் இந்திய முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
உத்திரபிரதேசத்திலுள்ள அயோத்தியில் 16 ஆம் நூற்றாண்டு  பாப்ரி மஸ்ஜித்  இடிக்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இந்திய முஸ்லிம்கள் பேரவையின் தலைவர் முனாஃப் ஸீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் " 1947 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிடப்பட்ட வன்முறையைத் தூண்டும் வகையில் விஷம பிரச்சாரத்தை செய்து வந்தனர். முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, பலவந்தமாக ஆக்கிரமித்து அங்கு சிறு கோவில்களையாவது கட்ட வேண்டும். பின்னர் காலப்போக்கில் கோவில் விரிவு செய்யப்பட்டு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமோ, வரலாற்று சின்னங்களோ மக்களின் நினைவுகளிலிருந்து துடைத்தெறியப்பட்டு, அந்த இடங்களை முழுமையாக ஆக்கிரமித்து பின் சட்ட ரீதியாக உரிமை கொண்டாட வேண்டும் எனும் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தின் முதல் பலியாக பாப்ரி பள்ளி தேர்வு செய்யப்பட்டு 1949 டிஸ்ம்பர் 22 - 23 தேதிகளில் துவங்கி 1992 டிஸ்ம்பர் 06 அன்று முழுமையாக தரைமட்டமாக்கி விட்டனர். இவர்கள் அடுத்ததாக   ஹைதராபாத்திலுள்ள சார்மினாரை குறி வைத்துள்ளனர்."
 
நூற்றுக்கணக்கான மஸ்ஜித்கள் " பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னங்கள் " என அறிவிக்கப்பட்டு முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை தடுத்துள்ளனர்.
எனவே இந்திய அரசு உடனடியாக இத்தைய அபாயகரமான துரோக விரோத பிரச்சாரங்களை கட்டுக்குள் கொண்டு வந்து, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ( பாப்ரி மஸ்ஜித், சார்மினார் உள்ளிட்ட ) முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் அவற்றின் உண்மை உரிமையாளரான வக்ஃப் போர்டிடம் ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்.
 
இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே, முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறதோ என அச்சமூகம் அச்சம் கொள்கிறது. எனவே இந்திய பன்முக கலாச்சாரத்தை விரும்பக்கூடிய ஒவ்வொருவரும் இதனை எதிர்த்து ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும் " என்றும் முனாஃப் ஸீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அத்துடன், அரசு உண்மையிலேயே இவ்விஷயத்தில் அக்கறை செலுத்துவதாக இருந்தால், உடனடியாக லிபர்ஹான் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதித்து, பள்ளி இடிப்பில் பங்கு கொண்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நிவாரணம் அளித்து 1991 சட்டப்படி மத வழிபாட்டுதலங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
 
முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு முன்னால், மத்திய மாநில அரசுகள் புனிதமான பள்ளிவாசல் தரைமட்டமாக்க அனுமதித்து வேடிக்கை பார்த்து நின்றதை ஒருக்காலும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.
 
நன்றி : twocircles.net

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்