சார் ஒரு நிமிசம் : கூட்டுமனசாட்சிக்கு மத்திய அரசு தடை? ~ சஹாரா தமிழ்

ads

புதன், 20 பிப்ரவரி, 2013

சார் ஒரு நிமிசம் : கூட்டுமனசாட்சிக்கு மத்திய அரசு தடை?

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRP7SkyKeNzpfrwk1NVx5OWxm_DmPdgIGxP7b9i24wjvN8viEKN
இணையத்தில் சமூக வலைப்பின்னல் பக்கங்கள் பிரபலமானவை. அவற்றில் BLOGGER, FACEBOOK மற்றும் TWITTER ஆகிய தளங்கள் உலகப்புகழ் பெற்றவை.

ஒருவர் தனது கருத்துகளைத் தெரிவிக்கவும், வாசிக்கவும் அவற்றை நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளவும் இவை உதவுகின்றன.

எகிப்தில் ஒரு பெண்மணியின் வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட கருத்து, மக்களிடம் ஏற்படுத்திய எழுச்சியால் ஹோஸ்னி முபாரக் பதவியிழக்கும் அளவுக்குப் புரட்சி வெடித்தது. மும்பை தாதா பால்தாக்கரே இறந்ததற்கு மும்பையில் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது அவசியமில்லை என்று இரு இளம்பெண்கள் முகநூலில் கருத்து பரிமாறியதற்காக கைது செய்யப்பட்டு, எதிர்ப்பு கிளம்பிய பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

சாமான்யர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தங்களுக்கென தனித்தனியே முகநூல், வலைப்பக்கங்களை வைத்துள்ளனர். இதன்மூலம் பல்லாயிரம் பேருடன் உடனடியாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதோடு, மக்களுடன் தொடர்பிலிருப்பதாகக் காட்டிக்கொள்ளவும் இவை உதவுகின்றன. இணைய சமூக வலைத்தளங்களில் சாதகபாதகங்கள் இருந்தாலும் கருத்துரிமையின் அடையாளங்களில் இவைகளும் ஒன்றாக விளாங்குகின்றன.

கூட்டுமனசாட்சி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்சல்குருவுக்கு இரண்டு மரண தண்டனையும் மூன்று ஆயுள் தண்டனையும் வழங்குவதற்குக் காரணமாக இருந்தது. இந்திய ஜனநாயக அடையாளச் சின்னமான நாடாளுமன்றத்தைத் தகர்க்க முயன்றது, நாட்டு மக்கள் அனைவர்மீதும் தாக்குதல் நடத்தியதற்குச் சமம் என்றும், அத்தகைய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவர் தண்டிக்கப்படுவதையே நாட்டுமக்களின் மனசாட்சி விரும்புகிறது என்று மாண்புமிகு நீதிபதிகள் கருதியதால், அப்சல் குருவுக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது.

கூட்டுமனசாட்சிக்கும் சமூகவலைப்பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கூட்டுமனசாட்சியைத் திருப்தி படுத்துவதற்காக ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது சரியா? என்று கூட்டாக கருத்து பரிமாறுவதை நமது மத்திய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது, அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் நியாய/அநியாயங்கள் குறித்து கூட்டாக கருத்து பரிமாறுவது சரியல்லவாம். அதனால், இதுவரை ஐம்பதுக்கும் மேலான முகநூல் பக்கங்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஒருவனைக் குற்றவாளியாக்குவதற்குரிய சாட்சியங்களோ ஆவணங்களோ இல்லாமல் அவனுக்குக் கொலைத்தண்டனை வழங்குவதற்குக் கூட்டு மனசாட்சியை நீதி மன்றம் துணைக்கழைக்கலாம் எனில், அந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டுவோரின் கூட்டு மனசாட்சியைத் தடை செய்வது எவ்வகையில் நியாயம்?

இந்தியா ஜனநாயக நாடு என்பது எழுத்தில் மட்டும்தான்!

- பஞ்ச் கல்யாணி
இந்நேரம்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்