ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இந்தியன் ரயில்வே சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சாதனை படைத்துள்ளது.
பொதுவாக தட்கல் முன்பதிவு மற்றும் பண்டிகை காலங்களில் ஒட்டுமொத்தமாக அனைவரும் முன்பதிவு செய்வதால் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கிவிடும்.
சமீபத்தில் இணையதளத்தின் செயல்திறனை அதிகரிக்க ரூ.3 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்போது இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தட்கல் சமயங்களில் முன்பதிவு 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 7-ம் தேதி 4.96 லட்சம் இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. நேற்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 5.02 லட்சம் இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 2 மார்ச், 2013
ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து புதிய சாதனை படைத்த ஐ.ஆர்.சி.டி.சி...!
8:44 PM
இந்தியன் ரயில்வே, சாதனை