மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி ~ சஹாரா தமிழ்

ads

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

மலேசிய விமானம் வெடித்து சிதறியது: முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலிமலேசிய விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மலேசிய நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் மகளின் திருமணம், பெகான் என்ற இடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மலேசியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து, அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜார்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் ஹெலிகாப்டரில் திரும்பினர்.

மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதியில் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. காலை 4.55 மணியளவில் ஹெலிகாப்டரில் திடீரென தீபிடித்தது. பின்னர் வெடித்து சிதறிய விமானம் அடர்ந்த காட்டு பகுதியில் விழுந்தது. இதில் முன்னாள் தூதர் ஜமாலுதீன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து சென்று உடல்களை மீட்டனர்.

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய முக்கிய பிரமுகர்கள், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்