இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் திரையிடப்பட்ட இலங்கை போர்குற்றம் தொடர்பான ஆவணப்படத்தை பன்னாட்டு அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் பார்த்தனர்.
இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பான காட்சிகளை சேனல் போர் தொலைகாட்சி அண்மையில் வெளியிட்டது. இதனிடையே ஐ.நா.மனித உரிமைக்கூட்டத்தில் அந்த காட்சிகளை சேனல்போர் திரையிட்டுக்காட்டியது. இதனை பல்வேறு நாட்டு அரசியல் பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் பார்த்தனர். இதில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கை தமிழர்கள், விடுதலைப்புலிகள் கொலை செய்யப்படுவதை காட்சிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து போர்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச குழுவை இலங்கை அனுமதிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழர்கள் அங்கு சமூக நல்லிணக்கத்துடன் வாழ வழிபிறக்கும் என்று ஆவணப்பட இயக்குனர் கெலம்மெக்ரே தெரிவித்தார். மேலும் விசாரணை மேற்கொள்வதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாட்டு அரசு நம்பத்தகுந்த மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தவில்லை என்று அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் நாளை மறுதினம் தாக்கலாகும் எனவும் போர்க்குற்றம் தொடர்பான முக்கிய விவாதம் நடத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
சனி, 2 மார்ச், 2013
இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி,ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் திரையிடப்பட்ட இலங்கை போர்குற்றம் தொடர்பான ஆவணப்படம்...
8:06 PM
இலங்கை, இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள்