மக்கா விபத்தில் பலியானவர்களுக்கு 1.75 கோடி ரூபாய் இழப்பீடு! ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 17 செப்டம்பர், 2015

மக்கா விபத்தில் பலியானவர்களுக்கு 1.75 கோடி ரூபாய் இழப்பீடு!



ஜித்தா: மக்கா கிரேன் விபத்தில் பலியான குடும்பங்களுக்கு சுமார் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் (1 மில்லியன் சவூதி ரியால்) இழப்பீடு வழங்க சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று முஸ்லிம்களின் புனித நகரான மக்காவில் ஏற்பட்ட கடும் மணல் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கிரேன் சரிந்து விழுந்து சுமார் 111 பேர் பலியானார்கள் 238 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இழப்பீட்டு தொகைகளை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய் (1 மில்லியன் சவூதி ரியால்) மற்றும் காயமடைந்தவர்களுக்கு  89 லட்ச ரூபாய் (அரை மில்லியன் சவூதி ரியால்) இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இறந்தோரின் குடும்பத்திலிருந்து எவரேனும் ‪ இருவர் அரசின் விருந்தாளிகளாக அடுத்த வருடம் (2016) ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அதற்கான செலவையும் சவூதி அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது.

அதேபோல காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாது போனோர், இனி குணமடைந்த பிறகு அடுத்து வரமுடிந்த ஹஜ்ஜுக்கு, ‪ சவூதி ‎மன்னரின் விருந்தாளியாக‬ அவர் வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசே ஏற்கும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வந்து காண்பதற்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இருவருக்கு அரசு செலவில் விசிட் விசா வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சவூதி அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு உலக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்