சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 17 செப்டம்பர், 2015

சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது...

             சான்டியாகோ, செப். 17–  தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரப்படி மாலை 7.54 மணிக்கு பசிபிக் கடலையொட்டி உள்ள இலாபெல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. இலாபெல் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதில் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களிலும் கட்டிடங்கள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவுகோலில் இருந்தது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது.

3 மீட்டர் உயரத்திற்கு அலை எழுந்து வந்து தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டது. பக்கத்து நாடுகளான பெரு, அமெரிக்காவின் கவாய், கலிபோர்னியா பகுதி, எதிர்பக்கத்தில் உள்ள நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சுனாமி தாக்கவில்லை. எனினும், லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நிலநடுக்கத்திற்கு பிறகு பலமுறை சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் இரவு முழுவதும் வீதியிலேயே படுத்து தூங்கினார்கள்.

சிலி நாட்டில் 2010–ம் ஆண்டு 8.8 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்