செம்மரம் கடத்தியதாக 32 தமிழர்கள் திருப்பதியில் கைது... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 6 ஆகஸ்ட், 2016

செம்மரம் கடத்தியதாக 32 தமிழர்கள் திருப்பதியில் கைது...

ஆக.06., சென்னையில் இருந்து திருப்பதி வந்த 32 தமிழர்களை ஆந்திர போலீ ஸார் கைது செய்தனர். வியாழக் கிழமை இரவே இவர்கள் கைது செய்யப்பட்டாலும், நேற்று சப்தகிரி ரயிலில் கைது செய்ததாக ரேணி குண்டா போலீஸார் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள நகரி, புத்தூர், சித்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் பஸ், ரயில்களில் வரும் தமிழர்களை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லும் ஆந்திர போலீஸார் செம்மரம் கடத்தியதாக பொய் வழக்கு போடுவது வாடிக்கையாகி விட்டது.

சேஷாசலம் வனப்பகுதியில் 2 வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட பின்னர், இது தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் எந்த தவறும் செய்யாதபோதிலும், இவர்கள் சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். இறுதியில் இவர்கள் அனைவரும் நிரபராதிகள் எனக் கூறி திருப்பதி நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில், நேற்று முன் தினம் சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதிக்கு வந்த 32 தமிழர்களை, பின்தொடர்ந்து சென்ற ரேணி குண்டா போலீஸார் கரகம்பாடி சாலையில் உள்ள வெங்கடாபுரம் எனும் இடத்தில் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று மாலை ரேணிகுண்டா டிஎஸ்பி நஞ்சுண்டப்பா, இன்ஸ்பெக்டர் பாலய்யா ஆகியோர் செய்தி யாளர்கள் கூட்டத்தில் 32 பேரை ஆஜர்படுத்தி பேசியபோது, “செம் மரம் கடத்தும் கும்பலை சேர்ந்த இவர்கள் அனைவரும் சென்னை யில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருப் பதிக்கு வந்தனர். இவர்களை கைது செய்துள்ளோம்.

திருவண்ணா மலை மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 32 பேர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் இருந்து 22 கோடரிகள், கத்தி, கடப்பாரை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்