பிறந்த குழந்தையை சுட்டு கொன்ற மியான்மார் ராணுவம்... ~ சஹாரா தமிழ்

ads

செவ்வாய், 18 அக்டோபர், 2016

பிறந்த குழந்தையை சுட்டு கொன்ற மியான்மார் ராணுவம்...
















அக்டோபர் 14, 2016 , நேரம் மாலை 4 மணி மியான்மார் நாட்டில் அரக்கன் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியான வடக்கு மௌங்டவ் பகுதியை சார்ந்த லூட்டி பாறாங் மற்றும் கியாரி பாறாங் பகுதியில் மியன்மார் அரசு ஒரு கொடூரமான கொலையை அரங்கேற்றி இருக்கின்றது . அதில் 14 பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் . இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பமே செத்து பிணமாகிய செய்திகள் சர்வதேச அளவில் அதிச்சியைத்தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .

 மியான்மார் அரசு தொடர்ந்து ரோஹிங்கிய மக்களை சுடும் தருணத்தில் சொந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அவசரமாக ஓடும் வேளையில் ரோஹிங்கிய சகோதரர் இலியாஸ் அவர்களின் குடும்பங்கள் தப்பி ஓடும் நிலையில் இல்லை .காரணம் அவரது சகோதரி இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை பெற்று எடுத்து உள்ளார் . இலியாஸ் வீட்டிற்குள் புகுந்த மியான்மார் இனவாத ராணுவம்வீட்டில் இருந்த எல்லோரையும் ஒருவர் விடாமல் சுட்டுக் கொன்று உள்ளார்கள் .

அதில் அப்போது பிறந்த பச்சிளம் குழந்தையும் அடங்கும் என்பதை எழுதுகையில் என் கைவிரல் தடுமாறுகின்றது . இலியாஸ் அவர்கள் தாயார் வயது 57 ,முனவ்வரா வயது 26 . இலியாஸ் அவர்களின் 3 வயது மக்கள் , முனவ்வரா அவர்களின் 6 வயது மகள் இவர்கள் ராணுவத்தின் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் . நயீமா வயது 22 ராணுவத்தால் சுடப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் பர்மிய இனவாத அரசு இறந்த பிணங்களின் கைகளில் கத்தியை வைத்து புகைப்படங்களை எடுத்து விட்டு இல்யாஸின் வீட்டை விட்டு சென்று உள்ளார்கள் ராணுவம் சென்ற பிறகு அந்த கிராமத்து பகுதியை சேர்ந்த மக்கள் நடந்த நிகழ்ச்சிகளுக்கு சாட்சிகள் ஆகினார்கள்.

அதிர்ச்சியில் மீளாத நயீமாவை காப்பாற்றவும் , சுடப்பட்ட இலியாஸின் குடும்பத்தினரை அடக்க செய்வதற்கு உண்டான வேளைகளில் ஈடுபட்டார்கள் . மறுநாள் அக்டோபர் 15 , 2016, நேரம் காலை 7 மணி அன்று மீண்டும் பர்மிய இனவாத ராணுவம் இல்யாஸின் வீட்டிற்குள் நுழைந்தது. .உயிருக்கு பயந்த கிராமத்து மக்கள் ஓடி ஓளிந்தனர். இறந்த அத்துணை பிணங்களையும் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிகளை தோண்டி புதைக்கும் வேளையில் பர்மிய இனவாத ராணுவம் இறங்கியது .

எதுவும் செய்ய இயலாத நயீமாவும் உயிரோடு பிணத்துடன் பிணமாக புதைக்கப்பட்டாள். இலியாஸின் சகோதரர் இத்ரிஸ் அவர்களின் இந்த அறிக்கை எந்த முக்கிய ஊடகங்களில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 - அபூஷேக் முஹம்மத் .

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்