அல்லாஹ்வுடைய சட்டத்தில் சமரசம் இல்லை : இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரேபியா.....!! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 19 அக்டோபர், 2016

அல்லாஹ்வுடைய சட்டத்தில் சமரசம் இல்லை : இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரேபியா.....!!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியா அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லையென்று திட்டவட்டமாக அறிவித்து நாட்டின் இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மன்னரின் ராஜ குடும்பத்தை சேர்ந்த இளைஞர் கபீர் இளவரசர் அந்தஸ்து கொண்டவர். கபீருக்கும் அவருடைய நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் நண்பரை கொலை செய்து விட்டார்.

இளவரசர் கபீரை சவூதி அரேபிய காவல்துறை கைது செய்தது.

காவல்துறையின் விசாரணையில் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களாலோ, ஆட்சி அதிகார வர்க்கங்களினாலோ எவ்வித தலையீடுகளும், அத்துமீறல்களும் இல்லாமல் விசாரணை முறையான பாதையில் சென்று கொலை குற்றத்திற்கான ஆதாரங்களை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்தது. நீதிமன்ற விசாரணையில் கொலை செய்தது உறுதியானது.

கொலை குற்றத்திற்கு அல்லாஹ்வுடைய சட்டமான குர்ஆனும், நபிவழியும் மரண தண்டனையை கூறியுள்ளதால் இளவரசர் கபீருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மன்னர் குடும்பத்தை சேர்ந்த இளவரசருக்கு மரண தண்டனை என்ற பரபரப்பான சூழலில் இறுதியாக மன்னர் சல்மான் அவர்களிடம் கொலை குற்றவாளியை மன்னிக்குமாறு குடும்பத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

மனுவை பார்த்த மன்னர் சல்மான்...

நான் இந்த நாட்டிற்கு மன்னராக இருப்பதற்காகவோ, கொலையாளி என்னுடைய பேரன் என்பதற்காகவோ கொலை குற்றவாளியை மன்னிக்க முடியாது.

கொலைக்கு கொலை என்ற அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்து மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து இளவரசருக்கு மரண தண்டனையை உறுதி செய்தார். அதனைத்தொடர்ந்து நேற்று (18.10.16) இளவரசர் கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னராக ஆட்சிப்பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அவர்கள் தனது முதல் நாள் உரையில்....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றார்கள். எனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் என் குடும்பத்தினரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும், என்னுடைய மகன்கள், பேரன்கள் தவறு செய்தாலும் எவ்வித சமரசமும் இருக்காது என்றார்.

அவர் சொன்னதுபோல் தன்னுடைய பேரனான இளவரசருக்கு மரண தண்டனை வழங்கி இறை சட்டத்தில் எவ்வித சமரமும் இல்லை என்று நிரூபித்து விட்டார்.

மேலும் சவூதி அரேபிய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு 158 பேருக்கு மரண தண்டனை வழங்கியது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் 47 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கியது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதிலும் சவூதி அரேபிய அரசு தனித்து முத்திரை பதித்து வருகிறது. 

அரசனானாலும், ஆண்டியானாலும் அல்லாஹ்வுடைய சட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை சவூதி அரேபியா உலகத்திற்கு பிரகடனம் செய்துள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்