சஹாரா தமிழ்: துபாய்

ads

துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

துபாய் இஸ்லாமிய ஆளுமைக்கான விருது,ஒரு மில்லியன் திரகத்தை நன்கொடையாக வக்பு செய்த Dr.ஜாகிர் நாயக்...

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSKq3RLsVjsOWYX09XLsISBqhgDIEpodxdRv9MF3oly2RUbgUTJ

சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதுடன் தனக்கு கிடைத்த ஒரு மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கத்தை நன்கொடையாக வக்பு செய்த சாகிர் நாயக்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசு ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் அவ்வாண்டுக்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருதை கடந்த 17 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. இந்த வருடம் துபாய் அரசு வழங்கும் சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது இந்தியாவை சார்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சாரகர் சாகிர் நாயக்குக்கு வழங்கப்பட்டது.

இதன்போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஐக்கிய அரபு அமீரக திர்கத்தை (Dhs 1,000,000) தவ்வா பணியில் உள்ள பீஸ் டிவி க்கு நன்கொடையாக வக்பு செய்தார்.

சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான விருது வழங்கப் படுவதையும், தனக்கு வழங்கப்பட்ட பரிசை நன்கொடையாக வக்பு செய்த காணொளி (வீடியோ) -  http://www.youtube.com/watch?v=8pcoQ4nUojY#at=134

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

புனித ரமலானையொட்டி 30 இலட்சம் குழந்தைகளுக்கு இலவச ஆடை- துபை மன்னர் வழங்கினார்.

http://www.uaeinteract.com/news/article_pics/uae-56340.jpg

துபை,ஆக1: உலகின் இரண்டாவது பெரும்பான்மை மக்களாகிய முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி மனிதாபிமான பிரசாரத்தை கடந்த 11 ஆம் தேதி  துபை மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தம்புதிய ஆடைகளை இலவசமாக விநியோகித்தார்.

முதலில் 10 லட்சம் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில் அதை விட கூடுதலாக புத்தடைகள் தேவைப்பட்டதால் 30 லட்சம் குழந்தைகளுக்கு அவர் புத்தாடைகள் வழங்கினார். இது குறித்து மன்னர் ஷேக் முகமது கூறும்போது, ஐக்கிய அரபு எமிரேட் மக்களின் தாயாள குணத்தால்ஐது சாத்தியமாகியுள்ளது இதனால் சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்

அமீரகத்தில் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்திய ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜாமியத்து அஹ்மர் அல் ஹிலால் (ரெட் கிரசன்ட்) ஆணையம் மற்றும் இதர அமைப்புகளையும் மனதார பாராட்டுகிறேன். ஐக்கிய அரபு எமிரேட் நாடானது தொண்டு செய்வோரின் தலைநகராக விளங்குகிறது என்று பரவசத்துடன் கூறினார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்