துபை,ஆக1: உலகின் இரண்டாவது பெரும்பான்மை மக்களாகிய முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி மனிதாபிமான பிரசாரத்தை கடந்த 11 ஆம் தேதி துபை மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த 30 லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தம்புதிய ஆடைகளை இலவசமாக விநியோகித்தார்.
முதலில் 10 லட்சம் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில் அதை விட கூடுதலாக புத்தடைகள் தேவைப்பட்டதால் 30 லட்சம் குழந்தைகளுக்கு அவர் புத்தாடைகள் வழங்கினார். இது குறித்து மன்னர் ஷேக் முகமது கூறும்போது, ஐக்கிய அரபு எமிரேட் மக்களின் தாயாள குணத்தால்ஐது சாத்தியமாகியுள்ளது இதனால் சுமார் 30 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்
அமீரகத்தில் இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்திய ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜாமியத்து அஹ்மர் அல் ஹிலால் (ரெட் கிரசன்ட்) ஆணையம் மற்றும் இதர அமைப்புகளையும் மனதார பாராட்டுகிறேன். ஐக்கிய அரபு எமிரேட் நாடானது தொண்டு செய்வோரின் தலைநகராக விளங்குகிறது என்று பரவசத்துடன் கூறினார்.
வியாழன், 1 ஆகஸ்ட், 2013
புனித ரமலானையொட்டி 30 இலட்சம் குழந்தைகளுக்கு இலவச ஆடை- துபை மன்னர் வழங்கினார்.
6:06 PM
உலக செய்திகள், துபாய்