ஹஜ் பயணம் மேற்கொள்ள வயது தடையில்லை என்று தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயல் அலுவலர் அலாவுதீன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியா செல்லவிருக்கும் சமயங்களில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 12 வயதுக்குட்பட்ட பயணிகளை சவூதி அரேபிய அரசு தடை செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
இதுதொடர்பாக, மத்திய ஹஜ் குழுவிடம் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு எடுத்துரைத்து தெளிவுரைகள் கோரியது. ஹஜ் 2009ம் ஆண்டுக்காக வயது, பாலினம் குறித்து எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று சவூதி அரேபிய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் வந்துள்ளன.
மேலும், இந்த ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பருவகால ப்ளு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் (எச்1என்1 ப்ளு) காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து போட்டதற்கான சான்றிதழை ஹஜ் விசா பெறுவதற்கு இரண்டு வாரம் முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.
நாள்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த ஆண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை பாதுகாப்பை கருத்தில் கொண்டு தள்ளிப்போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி: tmmk-ksa