சமுதாயத்திற்கு இலவச பொறியியல் கல்வி ~ சஹாரா தமிழ்

ads

புதன், 14 ஏப்ரல், 2010

சமுதாயத்திற்கு இலவச பொறியியல் கல்வி

                            அஸ் - ஸலாம்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

ஆடுதுறை - திருமங்கலக்குடி

முஸ்லிம்

ஏழை மாணவிகள் 2 பேருக்கு இலவச கல்வி 

 

ஆடுதுறை அருகே திருமங்கலக்குடியில் அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி சென்ற ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. அஸ்ஸலாம் அறக்கட் டளை நிர்வாக குழு முடி வின் படி அதிக மதிப்பெண்கள் பெற்றும் படிக்க வசதியில்லாத ஏழை மாணவ-மாணவிகளும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 2 மாணவிகளுக்கு முதல் கட்டமாக, நிர்வாக ஒதுக்கீட்டில் இலவசமாக பொறியியல் கல்வி கற்க அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அஸ்ஸலாம் பொறியி யல் கல்லூரியின் தலைவர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம் மது இப்ராகிம், செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.எம்.ஷாஜகான், துணைத் தலைவர் ஜே.அன்வர் பாட்சா, இணைச் செயலாளர்கள் அ.சிராஜூதீன், ஓய்.சாதிக்பாட்சா, பொருளாளர் ஓ.முகம்மது உசேன் ஆகியோர் சோழபுரத்தை சேர்ந்த ஏழை மாணவி மின்காஜ் நிசா, பட்டவர்த்தியை சேர்ந்த ஆயிஷாபர்வீன் ஆகியோருக்கு இலவசமாக கல்வி கற்பதற்கான ஆணையை வழங்கினர்.

 

இது பற்றி நிர்வாக குழு வினர் கூறுகையில், மேலும் 3 மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடுகள் செய்து வருகி றோம். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் இலவச கல்வி அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். கம்ப்யூட் டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு கட்டணத்திலேயே நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திலும் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு நிர்வாக குழு வினர் தெரிவித்தனர்.

http://www.assalamcollege.com/gallery/25.jpghttp://www.assalamcollege.com/gallery/33.jpg
 

----------------------------------------------                      ------------------------==============================


அன்பு சஹோதரர் மெஹபூப் அனுப்பிய செய்திக்கு நன்றி. 
 
இது சென்ற வருடம் வழங்கப்பட்ட இலவசக்கல்வியின் செய்தி. இன்ஷா அல்லாஹ் அதுபோலவே  வரும் வருடமும் நம் சமுதாயத்தை சேர்ந்த 3 மாணவர்களுக்கு 100 % இலவசக்கல்வியை வழங்க அஸ் சலாம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். தகுதி உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுதிக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
 
கல்லூரியை பற்றிய சுருக்கம் :
 
அஸ் சலாம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லுரி நமது சமுதாயத்தை சேர்ந்த 6 நண்பர்களின் முயற்சியினால் 100 உருப்பினர்களைகொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதன் மூலம் 2009 ம் தொடங்கப்பெற்றது. இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லுரி வளாகதிலயே மெட்ரிக் பள்ளி, polytechnic காலேஜ், கலை மற்றும் அறிவியியல் (women ) தொடங்கப்பெற உள்ளது.
 
மேலும் விபரங்கள் அறிய www.assalamcollege.com & www.assalamtrust.com  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
 
அன்புடன்
A . M . ஷாஜஹான்
செயலாளர் மற்றும் தாளாளர்
அஸ் சலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லுரி
ஆடுதுறை - தஞ்சை மாவட்டம்.
 

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்