மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரேவுக்கு, இந்துத்துவாக்களின் அச்சுறுத்தல் இருந்தது என்ற பரபரப்பான கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் முன்வைத்தது முதல், அவருக்கும் பாஜகவுக்கும் மத்தியில் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. இதில் திக்விஜய் சிங் தாக்குதலில் தடுமாறுகிறது தாமரை.
இப்போது, யூதர்களிடம் ஹிட்லர் தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என்று திக்விஜய் கூறி மீண்டும் அனலை கிளப்பியுள்ளார். திக்விஜய் சிங்கின் இந்த கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே! யூதர்களை கொன்று குவித்த நாஜிப்படைக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியாவின் குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் ரத்தம் குடித்து தாகம் தீர்த்தது சங்பரிவார் என்பதை சாமான்யனும் அறிவான். ஆனால், இதை சொல்லும் திக்விஜய் சிங் சார்ந்த காங் அரசு, முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய அநீதிகளை இளைத்தவர்களைக் கண்டு பாராமுகமாக இருப்பதும் கேள்விக்குரியதே!
மேலும்
பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி 1992-ம் ஆண்டு மேற்கொண்ட ''ரத யாத்திரை'' இந்து- முஸ்லீம்களிடையே பெரிய அளவில் முரண்பாட்டினை தூண்டியது. இந்த ''ரத யாத்திரை'' இந்தியாவின் தீவிரவாதத்திற்கு ஆணிவேராக அமைந்தது. இந்திய வரலாற்றில் கறுப்பு சம்பவமாக பாபர் மசூதி இடிப்பு அமைந்தது என்று கூறும் திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜிதை இடித்த அத்வானிக்கு ஒருநாள் தண்டனை[!] வழங்கி சரித்திரம் படைத்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்தது பொம்மை நரசிம்மராவ் தானே! மேலும், காங் அரசால் அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மஸ்ஜித் இடிப்பு விஷயத்தில் அத்வானி உள்ளிட்ட 68 பேரை குற்றவாளியாக அடையாளம் காட்டியும், அந்த கும்பல் மீது கைவைக்க துணிவில்லாத காங் கட்சியை சேர்ந்த இவர் இவ்வாறு பேசுவது வெறும் பரபரப்புக்காகவா?
அடுத்து, எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக இல்லை. எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக உள்ளனர் என்று பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. இந்து தீவிரவாதிகள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறலாம் என்று கூறும் திவிஜய்சிங், பாஜக அவ்வாறு முஸ்லிம்களை சாடுவதற்கு ஏதுவாக, எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அதிகாரவர்க்கத்தின் பார்வை முஸ்லிம்கள் மீது மட்டுமே பதிந்தபோது, அதை கண்டுகொள்ளாமல் மவ்னம் காத்தது ஏன்?
மேலும், ''சிஷூ மந்திர்'' பள்ளிகளின் மாணவர்களிடம் அவர்களின் மனதில் முஸ்லீம்கள் பகைவர்கள் என்ற தவறான கருத்தினை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது என்கிறார் திக்விஜய் சிங். பாஜக ஆட்சியில் மந்திரியாக இருந்த முரளிமனோகர் ஜோஷியால் பாடத்திட்டங்களில் காவிக்கருத்துக்கள் திணிக்கப்பட்டு, வரலாறு திரிக்கப்பட்டதாக அப்போது பரவலாக குற்றசாட்டு எழுந்தது. அடுத்து வந்த காங் அரசு பாடத்திட்டங்களில் செய்த சீர்திருந்தங்கள் என்ன? என்பதையும் திக்விஜய் சிங் சொல்வாரா? மேலும் ராணுவம், காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ். தனது ஆதரவாளர்களை பெருக்கிவருகிறது என்கிறார் திக்விஜய் சிங். இதை சொல்லி புலம்புவதை விட, இப்போது காங்கிரஸ் அரசுதானே மத்தியில் நடக்கிறது? ராணுவத்தையும், காவல்துறையையும் மதசார்பற்ற முறையில் வடிவமைத்திட தயக்கம்?
ஆக இப்படி வெற்று அறிக்கைகள் அரசியல் சதுரங்கத்தில் பாஜகவுக்கு சவாலாக இருக்கலாம். ஆனால் இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கோ நாட்டுக்கோ எந்த நன்மையுமில்லை. இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்ற கருத்தை காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்தும் என்ற திக்விஜய் சிங்கின் கூற்று உண்மையானால், முதலாவதாக, நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டுவதற்கு நாடளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, பாபர்மஸ்ஜிதை இடித்தவர்களையும் தண்டித்து காட்டட்டும். அப்போதுதான் முஸ்லிம்கள் காங்கிரசை நம்புவார்கள். மாறாக வெற்று அறிக்கை காட்டி ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் ஏமாளிகளல்ல என்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ளட்டும்.
- mugavai abbas
புதன், 22 டிசம்பர், 2010
போட்டுத்தாக்கும் திக்விஜய் சிங்கும்; திணறும் பாஜகவும்!
3:12 PM
அரசியல்