டெல்லி,பிப்.26 : மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் 2013 - 2014 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :
பயணிகள் கட்டண உயர்வு இல்லை.
சரக்குகள் கட்டணம் 5 % உயர்வு
முன்பதிவு மற்றும் முன்பதிவை ரத்து செய்யும் கட்டணம் அதிகரிப்பு
தட்கல் கட்டணம் உயர்வு
26 புதிய பயணிகள் ரயில்கள் இயக்கப் படும்
67 விரைவு ரயில்கள் அறிமுகம்
500 கி மீ புதிய இருப்புப் பாதை பணிகள் முடிக்கப் படும்
ரேபரேலி,[பாலக் காடு,சொனெபெட்.பில்வாரா,கலஹண்டி,கோலார்,பிரதாப்கர் ஆகிய இடங்களில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு நிலையம் அமைக்கப் படும்
10000 க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராஸிங் நீக்கம்
இனி ஆளில்லா லெவல் கிராஸிங் அமைக்கப் படாது
ஏப்ரல் 1 முதல் டீசல் விலைக்கேற்ப சரக்குக் கட்டணத்தில் மாற்றம்
ரயில் கட்டண நிர்ணய ஆணையம் அமைக்க பரிசீலனை
ஆசாதி எக்ஸ்பிரஸ் திட்டம் அறிமுகம்
புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 1800111321 அறிமுகம்
கூடங்குளத்துக்கு ரயில் சேவை
1.52 லட்சம் பணி இடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமனம்.