தமிழகத்தில் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரின் மகள் வித்யா 30-1-2013 அன்று விஜய் பாஸ்கர் என்பவரால் திராவகத் தாக்குதலுக்கு உள்ளாகி, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-2-2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த கொடுஞ்செயலால் அகால மரணமடைந்த வித்யாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் வருகின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின்போது, திராவக விற்பனையை கட்டுப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்:முதல்வர் அறிவிப்பு ஜெயலலிதா அறிவிப்பு...
5:39 PM