நாளை தாக்கலாகிறது ரயில்வே பட்ஜெட்! ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 25 பிப்ரவரி, 2013

நாளை தாக்கலாகிறது ரயில்வே பட்ஜெட்!


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTCDrfPXmk7So3VHIlZ46lN7a6Y25L64AlJvJHGKR1b_1A46ncn

டெல்லி, பிப்.25 : லோக்சபாவுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்ற நிலையில் நாளை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. 27ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் அதை தொடர்ந்து 28ந் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக நாளை காலை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் கடந்த மாதம் 22ந் தேதி பயணிகள் கட்டணம் திடீரென 20% உயர்த்தப்பட்டது. தற்போது டீசல் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட்டுவிட்ட நிலையில் ரயில்வேக்கு ரூ3300 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது.

 இதனால் கட்டண உயர்வு என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்கின்ற ரயில்வே வட்டாரங்கள். ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மீண்டும் பயணிகள் கட்டணத்தில் கைவைக்காமல் சரக்கு கட்டணத்தில் லேசாக மாற்றம் செய்து நாளைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல் லோக்சபா தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு 100க்கும் மேற்பட்ட புதிய ரயில் அறிவிப்புகள் வெளியிடப்படலாம். ஏசி, டபுள் டெக்கர், பாசஞர் ரயில்கள் என பல புதிய சேவை அறிவிப்புகள் கொட்டிக் கிடக்கலாம். இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலை இயக்குவது குறித்த அறிவிப்பும் வெளியாகக் கூடும். தேர்தல் நெருங்குவதால் அறிவிப்புகள் பலமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்