ஸ்ரீ ஹரிகோட்டா,பிப்,25 : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ சார்பில் பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் இன்று மாலை 6.01 மணிக்கு ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் இந்திய - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட சரள் என்ற செயற்கைகோளுடன், கனடா-2, ஆஸ்திரேலியா-2, இங்கிலாந்து-1, டென்மார்க்-1 ஆகிய நாடுகளின் செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன. வானிலை, தட்ப வெப்ப மாற்றங்கள் போன்ற தகவல்களை பெறுவதற்கு இந்த செயற்கை கோள்கள் உதவும்.
கவுன்ட் டவுன் தொடங்கியதும், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான முழு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. எல்லாம் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ராக்கெட்டை உந்தி செல்லும் இன்ஜின்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அவையும் திருப்திகரமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று மாலை 6.01 மணிக்கு பிஎஸ்எல்வி சி-20 விண்ணில் பாய்ந்தது. பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயந்ததை அடுத்து விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி பாராட்டு
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின் மற்றொரு ஒரு மகத்தான சாதனை என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு கடினமாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கு அவர் தம் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
திங்கள், 25 பிப்ரவரி, 2013
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-20 ராக்கெட்
9:11 PM
ராக்கெட்