அகமதாபாத் : 2004 ஆம் ஆண்டு குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெற்ற என்கவுண்டரில் இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்டனர்.
என்கவுண்டரை நடத்திய காவல்துறை அதிகாரிகள் இஸ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பெரும் லஸ்கர் எ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என தெரிவித்தனர்.
இஸ்ரத் ஜஹானை சுட்டுக் கொன்றது போலி என்கவுண்டர் என புகார் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. போலி என்கவுண்டர் குறித்து விசாரணை செய்து வந்த சி.பி.ஐ போலி என்கவுண்டரில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஜி.எல்.சிங்காலை கைது செய்துள்ளது.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
குஜராத் போலி என்கவுண்டர் - காவல்துறை அதிகாரி கைது!
2:58 PM
போலி என்கவுண்டர்