இலங்கை ராணுவத்தால் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சி இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இக்கொடுஞ்செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்துகிறது. இன்று மாலை 4 மணிக்கு லயோலா கல்லூரி அருகிலிருந்து முற்றுகை ஊர்வலம் தொடங்கப்பட உள்ளது. மனிதநேயமுள்ள அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
இலங்கை தூதரக முற்றுகைக்கு ம.ம.க அழைப்பு!
3:03 PM
மமக, மனிதநேய மக்கள் கட்சி, முற்றுகை