பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டி, வைகோ நான்கு கட்ட நடைபயணத்தை அறிவித்து முதல்கட்ட நடைபயணத்தை கடந்த மாதம் நெல்லை மாவட்டம் உவரி முதல் மதுரை வரை 400 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்திலிருந்து 2ம் கட்ட நடைபயணத்தை துவக்கிய வைகோ, 11 நாட்கள் 250 கி.மீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு 28 ம் தேதி மறைமலை நகரில் நிறைவு செய்தார்.
இதன் தொடக்க நிகழ்வில் மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டார். 20/2/2013 அன்று புதுப்பட்டினம்(கல்பாக்கம்) வருகை தந்த வைகோ அவர்களை தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் வாழ்த்தி வரவேற்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். வைகோ தனது உரையில் தமுமுக மமக வின் மனிதநேயப் பணிகளை நெகிழ்ந்து பேசினார்.
இதையொட்டி மறைமலை நகரில் நடைப்பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ம.ம.க-வின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி,காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக வைகோ உரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
சனி, 2 மார்ச், 2013
பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டி வை.கோ-வின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம் - டாக்டர்.பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பங்கேற்பு!
8:00 PM
தமுமுக, மமக, மனிதநேய மக்கள் கட்சி