பீகார் முதல்வர் நிதீஷ்சுக்கு அரசிய(லி)ல் சிக்கல்... ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 மார்ச், 2013

பீகார் முதல்வர் நிதீஷ்சுக்கு அரசிய(லி)ல் சிக்கல்...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQOVzSYghf4l4IifrzZSswEBqdrrTCzkHbCUEeCvTjUmMP0cxa_

புதுடில்லி,மார்ச்.2: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதாதள கட்சி தலைவர் நிதீஷ்குமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பீகாரில்பா.ஜ.,கூட்டணியுடன் இணைந்துஆட்சி புரிந்து வருகிறார் நிதீஷ்குமார்.

சமீபத்தில் தாக்கப்பட்டுள்ள பட்ஜெட்டை பாராட்டி பேசினார். இது இவரை விமர்சனத்திற்குள்ளாக்கியது. இதனால் இவர் காங்., அணிக்கு மாறுவாரா என்று பேசப்பட்டு வருகிறது. நிதீசுக்கும், மோடிக்கும் சற்று ஏழாம்பொருத்தம்தான். காரணம் பீகாரில் முஸ்லிம் ஓட்டுக்களை பெறுவதில் மோடி தடையாக இருப்பார் என நிதீஷ் கருதுகிறார். இதற்கிடையில் இன்றைய பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்பட்டார். பீகார் மாநில முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் லாலு கட்சி ராஷ்டிரிய ஜனதாதளம் நிதீசை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்து லாலூ கட்சியின் மூத்த பிரதிநிதி ஒருவர் கூறுகையில்; மோடி ஏறக்குறைய பிரதமர் வேட்பாளர் என்பதில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிதீஷ் தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவர் இதனை ஏற்று கொள்வாரா அல்லது எதிர்ப்பாரா என்று தெரிவிக்க வேண்டும். இது குறித்து அவரது தரப்பு நிலையை எதிர்பார்க்கிறோம் என நிதிஷை தூண்டி விட்டுள்ளார். இதனால் பா.ஜ.,வில் அவர் நீடிப்பாரா விலகுவாரா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்திருக்கிறது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்