இஸ்ரோ-வின் இன்சாட் 3டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 26 ஜூலை, 2013

இஸ்ரோ-வின் இன்சாட் 3டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ5hC2sdSDgr4J9mFSu05e5TGRGBBDfSLAJkcID6tPr2bRi4rqS

நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக வானிலையை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இன்சாட் 3டி என்ற செயற்கைக் கோள் வெற்றிகரகமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பருவநிலை மாறுபாடு, தகவல் தொழில்நுட்பம், வானியல் குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வரிசையில் இன்சாட்- 3 டி என்ற ‌நவீன செயற்கைக் கோளானது அதிகாலை 1. 23 மணிக்கு பிரான்ஸ் நாட்டின் பிரன்ச் கயானாவில் இருந்து பிரான்ஸ் ராக்கெட்டான ஏரியன் -5 மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 1.23 க்கு விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 37 நிமிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது, இதனையடுத்து, இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 2 ஆயிரத்து 60 கிலோ எடையுள்ள இந்‌த செயற்கைக்கோளில் மிக சக்தி வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்களும், கேமிராக்களும், இணைக்கப்பட்டுள்ளன, இவை, பூமியிலிருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு 26 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்திய நிலப்பரப்பு ஆகிய பகுதிகளில் நிலவும் வானிலையை துல்லியமாக அளவிட்டு தகவல்களை வழங்கும்.

வானிலை ஆய்வுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட கல்பனா செயற்கைக்கோளுக்கு மாற்றாக இன்சாட் 3 டி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்