பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் நச்சு கலந்து பீகாரில் 23க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மரணமுற்றதும்,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதிய உணவில் நச்சு உள்ளதாக செய்திகள் வெளிவரும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் திலாரி என்னும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் மதிய உணவில் செத்த தவளைகள் கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மோராதாபாத் மாவட்டம் திலாரி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தவளை செத்துக் கிடந்த உணவை அருந்திய நான்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சித்திரகூட் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்திலும் இதே போன்று மதிய உணவில் தவளைகள் செத்து கிடந்தனவாம்.
பாதிப்படைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் ராம் கோவிந்த் செளத்ரி உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணகள் நடந்து வருகின்றன.
வெள்ளி, 26 ஜூலை, 2013
மோராதாபாத் : மதிய உணவில் தவளைகள்!
11:36 AM
இந்தியா