‘‘குஜராத் முன்னேற்றம் குறித்த பகிரங்க விவாதத்துக்கு மோடி தயாரா? எந்த இடத்தில் விவாதம் வைத்துக்கொள்ளலாம் என்பதை அவர் முடிவு செய்யட்டும். நாட்டு மக்கள் நீதிபதியாக இருக்கட்டும்’’ என்று மனீஷ் திவாரி தனது உரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
"அமர்த்தியா சென் கூறிய கருத்துக்கு பாஜகவின் எதிர்வினை பற்றி குறிப்பிட்ட மனீஷ் திவாரி " மக்களுக்கு தங்கள் கருத்தைக் கூற உரிமை இல்லையா? பாரதீய ஜனதாவைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஆதரவாக ஒருவர் செயல்படுகிறவரை அவர் நல்லவராகத் தெரிகிறார்" என்றும் சுட்டியுள்ளார்.