கொழும்பு - இலங்கையில் மாகாண அமைச்சர் ஒருவர் முஸ்லிம்களின் வணக்கத்தலத்தினை மூடச் சொன்னதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் பதுளைமஹியங்கனை என்ற இடத்தில் மஸ்ஜிதுல் அரபா மசூதி உள்ளது. இன்று (19.07.13) காலையில் அங்கு ஊவா மாகாண அமைச்சர் வந்து, மசூதியில் தொழுகைகளை நடத்தக் கூடாது என மிரட்டியுள்ளார்.
மசூதிகள் தினமும் ஐந்து வேளைகள் மசூதியில் தொழுகைப் புரிகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மதியம் ஜூம்ஆ என்ற சிறப்புத் தொழுகை நடைபெறுகிறது. அமைச்சரின் மிரட்டலை அடுத்து மசூதி மூடப்பட்டு விட்டதால் அங்கு இன்று அந்த சிறப்புத் தொழுகையும் நடைபெறவில்லை. இதனால் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
இதே மசூதியில் சில தினங்களுக்கு முன்பாக, மர்ம நபர்கள் சிலர் பன்றி இறைச்சியினை வீசியது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 26 ஜூலை, 2013
இலங்கை - மிரட்டி மஸ்ஜிதுல் அரபா மசூதி மசூதியை மூடிய அமைச்சர்
11:46 AM
இலங்கை, இலங்கையில் முஸ்லிம்கள்