கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது உ.பி.அரசு : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்... ~ சஹாரா தமிழ்

ads

வியாழன், 12 செப்டம்பர், 2013

கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது உ.பி.அரசு : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...



டெல்லி: முசாபர்நகர் கலவரத்தை கட்டுப்படுத்த உத்திர பிரதேச அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் கலவரம் குறித்து 16ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டதாக கூறி உள்ள உச்சநீதிமன்றம், அமைதியை நிலை நாட்டும் பிரச்சினையில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் கலவரம் பரவிய வாபர்ஸ் தொகுதிக்கு செல்ல முயன்ற மத்திய அமைச்சர் அஜித்சிங், தொகுதி எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பேசிய அஜித்சிங், உத்திர பிரதேச கலவரத்திற்கு பாஜக, சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டு சதியே காரணம் என்று கூறினார். முசாபர்நகர் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடுத்த வாரம் கலவரம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்