நானும் பார்த்தேன் பொறுத்து
இது வரை வரவில்லை கருத்து
ஊடக வியலார்களே
உண்மையை பேசுகிறோம் என்று உலருபவர்களே
பிறருக்கு முள்ளு தைத்த வலியை
எங்கள் மீது கொண்டு வர பலியை
காட்டுவதற்கு எழுதும் உன் பேனா வலிமை
இரத்தம் சிந்தி கிடக்கும் இந்த சிறுவனுக்காய்
ஏன் சிந்தவில்லை உன் பேனா மை
நாங்கள் மைனாரட்டி
அஞ்சலிக்கு ஓட்ட போதும் ஒரு சுவரொட்டி
என்று நீ எண்ணி விட்டா
இதே நிலை வேறு ஒருவர்க்கு நடந்து விட்டா
செய்தி போடுவாய் மூணு நாலு
இதை விவாதிக்க உன் அரங்கத்திற்கு கொண்டு வருவாய் ஆளு
தொரக்களையடா வாய் ஒத்தன்கூட
என் புள்ள காவல் வாகனம் மோதி செத்தும் கூட
காலம் வரும்
அதை சிலதை திருப்பும்
அப்போது அந்த வலி உனக்கும் புரியம்
- பஷீர்
கோவையில் போலீஸ் வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
கோவை உக்கடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் பின்னால், ரகமதுல்லா என்பவரின் குழந்தை யாசிப், நின்றுகொண்டிருந்தான். ஆனால் குழந்தையை கவனிக்காமல், போலீஸ்காரர் வண்டியை எடுத்தார்.
எனவே, அந்த வாகனத்தில் சிக்கிய குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீன்மார்க்கெட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.