யார் இந்த தீனாநாத் பட்ரா? ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

யார் இந்த தீனாநாத் பட்ரா?



இன்றைய The Hindu நாளிதழில் தலைப்புச் செய்தி Batra's Panel to 'Indianise' Education என்பது. பதவி ஏற்றுள்ள பா.ஜ.க அரசு "கல்விச் சீர்திருத்தம்" குறித்து ஒரு ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வந்த கையோடு இந்தச் செய்தி. தீனாநாத் பத்ரா என்கிற ஆர்.எஸ்.எஸ் "கல்வியாளர்" இதற்கிணையான ஒரு அரசு சாராத ஆணையத்தை அமைத்துக் கல்வியை "இந்திய மயப்படுத்துவதைக் குறித்து" அறிக்கை தரப் போகிறாராம்..

யார் இந்த பத்ரா?

எனது 'ஆட்சியில் இந்துத்துவம்' நூலிலிருந்து (ஜூலை 2001) சில குறிப்புகள் (அக் 2001,பக். 39 - 42):

"1978ல் ஜனதா ஆட்சிக் காலத்தில் 'வித்யா சிஸ்தா சன்ஸ்தான்' என்கிற பெயரில் அகில இந்திய அலவில் இந்துத்துவ சக்திகளின் கல்வி முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இவ் அமைப்பின் பொதுச் செயலாளர் தீனாநாத் பத்ராவின் கூற்றுப்படி இந்த அமைப்பு நர்சரி முதல் கல்லூரி வரையிலான 14,000 கல்வி நிறுவனங்களை நடத்துகிறது........

இதன் நோக்கமாக அவர் சொல்வது: "ஆர்.எஸ்.எஸ்சின் கல்வி இயக்கத்தைப் பரப்புவதுதான்". "பாரதீய கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒரு மாற்றுக் கல்வி மாதிரியை" உருவாக்குவதுதான்......இவர்களது "பாரதீய வித்யா நிகேதன்" கள் நடத்துகிற "அத்யாபக ப்ரஷிக்‌ஷண கேந்திரங்களில்" வித்யா பாரதி ஆசிரியர்களுக்கு (இந்த நோக்கில்) சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன்.

இந்த நிறுவனங்களின் பாடத் திட்டங்களை NCERT நிறுவனம் மதிப்பிட்டுக் கீழ்வருமாறு கூறியது:

"இளம் பிள்ளைகளுக்குப் பண்பாட்டைப் பயிற்ருவிக்கிறோம் என்கிற பெயரில் மத வெறியையும் ஒருதலைச் சார்பையும் வளர்க்கும் நோக்கில் இப் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன."

'சம்ஸ்கிருதி ஞான் பரிக்‌ஷா' , 'சம்ஸ்கிருதி ஞான் பரிக்‌ஷா பிரசனோடரி' எனும் இரு பாட நூல்களை அது கவலையோடு சுட்டிக் காட்டியது.

(எத்தகைய வரலாற்றுத் திரிபுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அந் நூலில் விரிவாகக் கூறியுள்ளேன். இங்கு ஒன்று மட்டும்)

எடுத்துக்காட்டாக முகமது கோரிக்கும் பிருத்விராஜுக்கும் நடைபெற்ற இறுதிப் போரில், தோல்வியடைந்த பிருத்வி ராஜை கோரி கைது செய்து கொண்டு சென்று கொன்றான் என்பது உண்மை வரலாறு. இதை வித்யாபாரதி பாட நூல்கள் இப்படிச் சொல்கின்றன:

'...பிருத்வி ராஜைக் கோரி கஜினிக்கு இட்டுச் சென்றான். ஆனால் அங்கே பிருத்வி ராஜ் ஒரு அமபை வீசி கோரியை வீழ்த்தினான். பிருத்வியின் காலடியில் கோரியின் பிணம் கிடந்தது. தனது பாவங்களைச் சொல்லி கோரி அழுவது போல அந்தக் காட்சி இருந்தது.' (NCERT அறிக்கை, 1998, பக்.6).

(இப்படி நிறைய... நூலைப் பார்க்க. கடைசியாக ஒன்று)

உ.பியிலுள்ள 'சரசுவதி சிசு மந்திர்' பள்ளியின் ஏழாம் வகுப்புப் பாடநூலில் உள்ள 'பொது அறிவு"க் கேள்விகள் சில்வற்றை அங்குள்ள 'ஜனநாயக மாதர் சங்கம்' சுட்டிக் காட்டியுள்ளது, அதில் சில:

# முலாயம் சிங் யாதவை ஏன் நவீன கால இராவணன் என்று சொல்கிறோம்?
# இராமர் கோவிலை அழித்து அந்த இடத்தில் மசூதியை பார் கட்டிய ஆண்டு எது?
# மசூதியை இடிக்க முயன்ற எத்தனை இந்துக்களின் உயிர்களை முலாயம் சிங்கின் குண்டுகள் குடித்தன?

இதுதான் வித்யா பாரதி பள்ளிகள் கல்வியை "இந்தியமயமாக்கும்" லட்சணம்.

இவர்தான் இன்றைய இந்து நாளிதழின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றுள்ள தீனாநாத் பட்ரா.

9வித்யாபாரதி கல்வித் தொடரில் மொத்தம் 70,000 பள்ளிகள் வரை இருக்கலாம் என பேரா. கே.என்.பணிக்கர் மதிப்பிட்டார்.)

(எனது 'இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு', 'ஆட்சியில் இந்துத்துவம்', 'இந்துத்துவத்தின் இருள்வெளிகள்' ஆகிய மூன்று நூல்களும் தற்போது மீண்டும் அச்சேற்றப் படுகின்றன. விரைவில் அவை மூன்றையும் ஒரே தொகுப்பாக 'உயிர்மை' பதிப்பகம் வெளியிட உள்ளது.)

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்