சஹாரா தமிழ்: India News

ads

India News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
India News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜூலை, 2019

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்


தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ நகர மேயர் அழைப்பின் பேரில் இசைநிகழ்ச்சி நடத்த கடந்த சனிக்கிழமை ரஹ்மான் கனடா சென்றார். டொரண்டோவில் அவர் தலைமையில் 100 இசைக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசத் தொடங்கினார்.

அப்போது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், கனடாவில் குடியேறும்படி ரஹ்மானுக்கு அன்பு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள ரஹ்மான், தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறு நாட்டில் குடியேற விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா அரசு ஒரு தெருவுக்கு அல்லா ராகா ரஹ்மான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 அக்டோபர், 2016

மத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்...

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய கனரகத் தொழிற்சாலை கள் மற்றும் பொதுத் துறை நிறு வனங்கள் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ. இவர் மேற்குவங்க மாநிலம் அசன்சால் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து தனது கட்சியினரை விடுவிப்பதற்காக தொண்டர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வழியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அசன்சாலில் திரிணமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் மலய் கடாக்கின் வீட்டின் அருகே, அமைச்சரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில், அமைச்சரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. அமைச்சரை நோக்கி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கற்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்கினர். இதில் அமைச்சர் காயமடைந்ததாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, துர்காபூர்-அசன்சால் போலீஸ் கமிஷனர் எல்.என்.மீனா தெரி வித்தார்.

ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி

புதுடெல்லி: பாராளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருக்கிறோம். ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறினார்.

சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்பு, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நஜீம் ஜைதி கூறியதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசும்போது, “கட்டாயமாக வாக்களிப்பது பரவலாக சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார்.

புதன், 19 அக்டோபர், 2016

மணிப்பூர் புதிய கட்சியை தொடங்கினார் இரோம் ஷர்மிளா

இம்பால், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் ஷர்மிளா  2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 200-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடினார்.

உண்ணாவிரதம் தொடங்கிய 3-வது நாளில் மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். இதையடுத்து  அவரை கைது செய்த போலீசார்  பலவந்தமாக சிகிச்சை அளித்தனர்.இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்னா விரதத்தை  முடித்துக்கொள்ள திட்டமிட்டு கடந்த ஆகஸ்டில் இரோம் ஷர்மிளா உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், இன்று  மணிப்பூர் தலைநகர் இம்பாலில், செய்தியாளர்களை சந்தித்த இரோம் ஷர்மிளா, புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  மக்கள் எழுச்சி நீதி கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் மூலமாக, வர உள்ள மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக, இரோம் ஷர்மிளா குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஆவதே தனது முதன்மை இலக்கு என்று கூறிய அவர், தீவிர அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆலோசனைகள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஆலோசனை கேட்க திட்டமிட்டுள்ளதாக, இரோம் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 25 ஏப்ரல், 2016

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணிக்கு எதிர்ப்பு : தில்லியில் ஆர்ப்பாட்டம்

http://media.dinamani.com/2016/04/25/congres.jpg/article3398717.ece/alternates/w620/congres.jpg 
ஏப்.,25.,சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜயதரணியை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸார் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அண்மையில் வெளியிட்டது. இதில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட, தற்போதைய எம்எல்ஏவும் அகில இந்திய மகளிரணி காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னியாகுமரி (மேற்கு) மாவட்டச் செயலாளரும், விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்டவருமான கே.அஜி குமார் தலைமையில் தமிழக காங்கிரஸார் சிலர் தில்லி ஜந்தர் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். 

இதுகுறித்து அஜி குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு கட்சி மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் எம்எல்ஏவாக இருந்த 5 ஆண்டுகளில் வெறும் 55 நாள்கள் மட்டுமே தொகுதிப் பக்கம் வந்துள்ளார். 

தொகுதி மக்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனில், அவரது உதவியாளரிடம் பணம் அளித்து, மனு அளிக்கக்கூடிய நிலைதான் இருந்து வந்துள்ளது.

விஜயதரணி சென்னையைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை தமிழக காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது எங்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகமாகும்.

மேலும், கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் பெரும் சரிவை ஏற்படுத்தும். எனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் வரை தில்லியில் எங்களின் போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

"எதிர்க்கட்சிகளின் சதி'
விளவங்கோடு தொகுதியில் தனக்குப் பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதில் எதிர்க்கட்சிகளின் சதி உள்ளது என்று விஜயதரணி எம்எல்ஏ தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறியதாவது: விளவங்கோடு தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாரத்தில் மூன்று நாள்கள் அங்கு தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளேன். தொகுதியில் இதுவரை 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.23 கோடியில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். தற்போது என் மீது புகார் சொல்லும் நபர், அதிமுக சார்புடையவர். எனவே, இது எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகளாகும். அந்த நபர் மீது கட்டப்பஞ்சாயத்து, மணல் கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கட்சித் தலைமை முடிவின்படி நான் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன் என்றார் அவர்.

புதன், 11 நவம்பர், 2015

பீஹார் நாயகன் லல்லு!

 

                    லாலுவை கோமாளியாக சித்திரிப்பவர்கள் ஊடகங்களும் உயர்ஜாதிக்காரர்களும். தங்களின் எரியும் வயிற்றை அணைக்க வழியின்றி இது போன்ற அற்ப வசைகளின் மூலம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.  லாலுவையும் நிதிஷையும் முட்டி மோத செய்து தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொண்டவர்கள் இன்று அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

நிதிஷின் சாதனை பீஹாரின் தொழில் முனேற்றம் என்றால் லாலுவின் சாதனை பீஹாரின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம் சமுக நீதி கொண்டாட்டம்.
                       
 லாலு அமைத்த வீதிகளில் நிதிஷ் செப்பனிட்டு சாலை அமைத்தார்.அந்த நன்றிக்கடனை தான் இன்றைய பீஹார் செலுத்தியுள்ளது.
                                                  
லல்லு நிதிஷின் பிரிவை தங்களுக்கான அட்சய பாத்திரமாக கொண்டு அழைந்தவர்கள் அவசரம் நிறைந்தவர்கள்.தாங்களாகவே போட்டு உடைத்தார்கள்.
                                              
 லல்லுவின் ஆட்சியை நிதிஷ் காட்டு தர்பார் என சொல்லவில்லையா? என்கிறார்கள் பி.ஜே.பி.காரர்கள்.அவர்கள் தங்களுக்கு மத்தியில் அள்ளி தெளித்த அசிங்கங்களை முகத்தில் அப்பிக் கொண்டே இதை கூச்சமின்றி சொல்லி திரிகிறார்கள்.
                                               
 லல்லுவின் ரயில்வே பட்ஜெட் பல படித்த ஹிந்துத்துவ கதாநாயகர்களை கைப்பிள்ளை வேடத்திற்கும் லாயக்கற்றவர்களாக ஆக்கி விட்டது.ஆக கட்டுரை லல்லுவிற்கான சான்று.

புதன், 29 ஜூலை, 2015

வியாழன், 23 ஜூலை, 2015

சென்னையில் நடைபெறும் சமாதானக் கலை விழா-2015 இணைய அழைப்பிதல்...




                         


                              இம்மாதம் 26-ந் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலை விழா 2015 என்ற பல்சுவை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலைவிழாவில் சமுதாயத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சமாதானக் கலைவிழாவின் சிறப்பம்சங்கள்;

- வெளிவாழ் இந்தியர்களின் துயர நிலையை எடுத்துக்கூறும் கடல் கடந்த பறவைகள் என்ற ஆணவப்படம் திரையிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் திரையிடப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- உணர்வாய் உன்னை என்ற வாழ்வியல் மேம்பாட்டுக் கலை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. உணர்வாய் உன்னை என்ற தலைப்பில் கடந்த 8 ஆண்டுகளாக 7 நாடுகளில் நடத்தப்பட்டு வரும் சிறப்பு பயிற்சி முகாமின் பாடத்திட்டங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

- பெண்மையின் மேன்மையைப் போற்றும் அவள் என்ற குறும்படம் திரையிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட உள்ளது.
- இஸ்லாமியப் பணியை சிறப்பாக ஆற்றுவோருக்கு வழங்கப்படும் இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.

- மேலும், பாஸ் பாஸ்.., நான் நோன்பிருக்கேன், புறம் என்ற புதிய 3 குறும்படங்கள் தொடங்கப்பட உள்ளது.

ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் என்ற சமூக நல அமைப்பு இந்த விழாவை மிக விமரிசையாக ஏற்பாடு செய்துள்ளது. யுனிவெர்ஸல் சின்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப், மீடியா 7, ஆர்.எஸ்.டி. வீடியோ, ஷா ஸ்டுடியோஸ் ஆகியவை விழாவிற்கு அணுசரனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு 9750581856, 9789567030 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 00971503851929 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


சனி, 27 ஜூன், 2015

மோடி அரசின்மீது முஸ்லிம் சட்டவாரியம் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு! ஆர்.எஸ்.எஸின் கட்டுப்பாட்டில் ஆட்சி செயல்படுகிறது!



புதுடில்லி,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அவர்களின் திட் டங்களை நிறைவேற்றி இந்தியாவின் மதச்சார் பின்மைக்கு பங்கம் விளைவிக்கிறார் மோடி என்று அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் இஸ்லா மியர்களின் உரிமை களுக்கு என்று உருவாக் கப்பட்டுள்ள முஸ்லீம் சட்டவாரியம் முதல்முறை யாக மோடி அரசுக்கு நேரடி எச்சரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து முஸ்லீம் சட்டவாரியம் புதனன்று வெளியிட் டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்

அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் கடந்த ஆண்டு மோடி தலைமை யில் ஆட்சிப்பொறுப் பேற்ற என்.டி.ஏ அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற தில் இருந்தே சிறு பான்மை மக்களுக்கு எதி ரான போக்கை கடைப் பிடித்து வந்தது.

இருப் பினும் மோடியின் பேச் சுமீது நம்பிக்கைவைத்து நாங்கள் அமைதியாக இருந்தோம். மோடி வாய் பேச்சில் மட்டும் சிறு பான்மை நலன்பற்றி பேசுகிறார். ஆனால், அவ ருக்குக்கீழ் பதவியில் உள்ள அமைச்சர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள்கூட சிறு பான்மையினருக்கு எதி ரான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரையும் மதவழி பாடு செய்ய வைப்பது (சூரிய நமஸ்காரம்) மத ஸ்லோகங்களைச் சொல்ல வைப்பது, மற்றும் மத அடையாளங்களை கட் டாயமாக அணிய வைப் பது போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டங்களை மோடி செயல்படுத்துவ தில் மிகத் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் தொடர்ந்து நடைபெறும் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதப் போக்கு நாடு முழுவது முள்ள சிறுபான்மையினத் தலைவர்களைக் கவலைக் குள்ளாக்கியுள்ளது.

புகார்கள் குவிகின்றன

கடந்த சில மாதங் களாகவே முஸ்லீம் மதத் தலைவர்கள், முஸ்லீம் நல அமைப்பின் உறுப்பினர் கள் மற்றும் அரசு சாரா முஸ்லீம் சேவை நிறுவ னத்தவர்கள் என பலர் நாடு முழுவதிலுமிருந்து எங்களிடம் புகாரளித்து வருகின்றனர். மேலும் வட மாநிலங்களில் சிறுபான் மையினரின் சொத்துக்கள் மறைமுகமாக சூறையா டப்பட்டு வருகின்றன.

அவர்களின் தொழில் நிறுவனங்கள் செயல்படா மல் அழிக்கப்பட பல் வேறு முறையில் தொந் தரவு செய்து வருகிறார் கள் பாஜக ஆளும் மாநி லங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு ஆளும் அதிகார வர்க்கமே நேரடியாக இறங்கி முஸ்லீம்களுக்குத் தொல்லைகள் கொடுத்து வருகின்றன.

யோகா நிகழ்ச்சியின் போது அவர்கள் கொடுத்த உறுதி மொழியை மீறி ஓம் என்ற மந்திரத்தையும் சூரிய நமஸ்காரத்தையும் செய்யச் சொல்லி வற்புறுத் தினார்கள்.  இந்த அரசு மத ரீதியாக நேரிடையா கவே செயல்பட ஆரம் பித்துவிட்டது.  இது அர சமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.

மோடி தலைமையில் உள்ள அரசு, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத் தவும், அதற்காக மக்களி டையே சிறுபான்மை யினர்மீது வெறுப்பை உண்டாக்கவுமான செயல் பாடுகளை வெளிப்படை யாகவே செய்ய தொடங்கி விட்டது. இது குறித்து மவுலானா வலி ரஹ் மானி விரிவாக எங் களுக்கு ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.

அடாலி கிராமத்தில் என்ன நடந்தது!

ஊடகங்களை விலைக்கு வாங்கிக்கொண்ட இந்த அரசு, முஸ்லீம்கள் மீது வட இந்தியா முழுமையும் நடக்கும் மத மோதல் களை வெளியில் வராமல் மூடி மறைத்து விடுகிறது, இதற்கு உதாரணமாக அரியானா மாநிலம், அடாலி கிராமத்தில் நடந்த மோதலைக் கூற லாம். சுமார் 3000 முஸ் லீம்கள் தாக்கப்பட்டு சொந்த கிராமத்தை விட்டு விரட்டப்பட்டும், இரண்டு வாரத்திற்குப் பிறகு சாதாரண நிகழ்ச்சி போல் பத்திரிகைகள் எழுதி இருந்தன. இன்று வரை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை.

அதை விட அரசு அவர்களுக்கு பாதுகாப்பிற்கான எந்த ஒரு உத்தரவாதமும் செய்யவில்லை.  முக்கியமாக அடாலி மதக்கலவரம் திட்டமிட்ட மதக்கலவரமாகும், இதற்கு அரசு முழுமையாக துணை போயுள்ளது. காவல்நிலை யத்தில் அடைக்கலம் பெற்ற முஸ்லீம் பெண் கள் இரவில் துன்புறுத்தப் பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும் என்று கூறினார்.

உலகம் முழுவதுமறிந்த காந்தியாரின் பிறந்த நாளை, சுவட்ச பாரத் என்று அறிவித்து விட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கே.பி ஹெட் கேவார் நினைவு நாளை யோகா தினமாக அறி வித்தது திட்டமிட்ட செயலாகும். மதச்சார் பின் மைக்கு எதிராக செயல் பட்டு வரும் மோடி அரசை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் துணை அமைப்பு களும்தான்.

அரசின் செயல்பாடுகள் குறித்து முஸ்லீம்களும் சிறு பான்மை மக்களும் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும். சிறுபான்மை விரோதப் போக்கிற்கு எதிராக விரைவில் அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் இந்தியா முழு வதுமுள்ள சிறுபான்மை அமைப்புகளுடன் இணைந்து அடுத்த நட வடிக்கை குறித்து திட்ட மிடப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

புதன், 17 ஜூன், 2015

உமர் (ரலி) அட்சியைக் கொண்டுவருவேன் - காந்தி முதல் கொண்டு, கெஜ்ரிவால் வரை...



காந்தி முதல் கொண்டு, கெஜ்ரிவால் வரை உமர் (ரலி)
அட்சியைக் கொண்டுவருவேன் என்று சொல்கிறார்களே
அப்படி என்னதான் ஆட்சிசெய்தார் உமர் (ரலி)....?
சற்று நீளமான பதிவு அவசியம் படியுங்கள் பரப்புங்கள்.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போதுமதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண
உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மி குந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது,
அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது
கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள்.
அதனால்தான் அழுகிறார்கள்”

உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை
செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள்
போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும்
தமது உதவியாளரை அழைத்து, அதைத்தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் பதறியவாறு, இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள்
அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி
கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும் என்றார்!

உதவியாளர் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார்.

அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.அவர்களை பின்தொடர்ந்து சென்றார் உதவியாளர் .

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த
சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள்
புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள்.

வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும்
இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப்
போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி
வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள்.

செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா?
அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க வேண்டும்
என்று விரும்பினேன்.

அதனால்தான்.” வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தலைவராகவும் விளங்கினார்கள் இதுபோன்ற ஆயிரம் உருக்கமான சம்பவங்களை சொல்லமுடியும் அதனால்தான் உலகில் பல மதத்தலைவர்களும், பல அரசியல் தலைவர்களும் உமரைப்போன்று ஆட்சிசெய்யவேண்டும் என்று இலட்சிய வேக்கை கொண்டுள்ளனர்...

- திருப்பூர் இலியாஸ்

ஞாயிறு, 14 ஜூன், 2015

என்னை அடித்திருக்கலாமே, ஏன் கொளுத்தினார்கள்? எரிக்கப்பட்ட பத்திரிகையாளரின் ஜகேந்திர சிங் கடைசி வாக்குமூலம்...



உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ராம் மூர்த்தி வெர்மாவுக்கு எதிராக எழுதி வந்த பத்திரிகையாளர் ஜகேந்திர சிங்கை எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

அவர் மரணம் அடைவதற்கு முன்பு அளித்த இறுதி வாக்குமூலத்தில், "அவர்கள் ஏன் என்னைக் கொளுத்தினார்கள். அமைச்சரும், அவரது அடியாட்களுக்கும் என்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், என்னை அடித்திருக்கலாமே, என் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள்" என்று கதறியுள்ளார்.

இந்த இறுதி வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சி சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் 1ம் தேதி, காவலர்களின் பாதுகாப்புடன் பத்திரிகையாளர் ஜகேந்தர் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை தீயிட்டுக் கொளுத்தியது. இதில் படுகாயம் அடைந்த ஜகேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை உயிரிழந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ராம் மூர்த்தி வெர்மா மற்றும் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஜூன், 2015

ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு அதே தொகைக்கான விமான டிக்கெட்: ஐ.ஆர்.சி.டி.சி



ரெயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் டிக்கெட் பதிவு உறுதியாகாத நிலையில் அதே தொகைக்கான விமான டிக்கெட்டை பெற முடியும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்து உள்ளது.

இந்த நடைமுறை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி.செய்திதொடர்பாளர் சந்தீப் தெரிவித்து உள்ளார்.

இதன்படி பயணிகளுக்கான விமானக் கட்டணம் அதே தொகைக்கானதாகவோ அல்லது 30 முதல் 40 சதவீதம் குறைவாகவோ இருக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டு சேவையில் உள்ள விமான நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மியான்மர் தாக்குதல்: பாஜகவின் மற்றொரு ரேம்போ பொய்!



மியான்மர் : "இந்திய இராணுவம் மியான்மருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவில்லை; இந்திய எல்லைக்குள்ளேயே தாக்குதல் நடந்தது" என மியான்மர் அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு மியான்மருக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட பயங்கரவாதிகளை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டதன் பேரில் இந்திய இராணுவம் மியான்மருக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி கடந்த நாட்களில் இந்தியாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா மீது அத்துமீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் இதுதான் கதி என்றும் எந்த நாடாக இருந்தாலும் மியான்மருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுபோன்றே அந்நாட்டுக்குள் புகுந்தும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா தயங்காது என்றும் பாகிஸ்தான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாஜக அமைச்சர் வீராவேசமாக முழங்கியிருந்தார்.

இந்திய பாதுகாப்புக்காக மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளைக் கொன்றது என்ற செய்தி இந்திய மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் பேசப்பட்டது. ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் இந்திய எல்லைக்குள்ளேயே நடத்தப்பட்டதாகும் மியான்மருக்குள் இந்திய இராணுவம் நுழையவில்லை என்றும் பயங்கரவாதிகள் இந்தியாவிலேயே ஒளிந்திருந்தனர் என்றும் மியான்மர் அரசு வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை, பாஜகவின் மற்றொரு பொய்யைக் கிழித்து தொங்கவிட்டுள்ளது.

இது தொடர்பாக மியான்மர் அதிபர் மாளிகை இயக்குநர் ஸா ஹிதாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அண்டை நாடுகளைத் தாக்க மியான்மர் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை. இருப்பினும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இந்திய எல்லைக்குள்தான் இருந்தது. மியான்மர் ராணுவம் கொடுத்த தகவலின்படி, இந்திய - மியான்மர் எல்லையில், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில்தான் இந்த நடவடிக்கை நடந்ததாக அறிகிறோம். எந்த வெளிநாட்டு சக்தியும், மியான்மர் மண்ணைப் பயன்படுத்தி அண்டை நாடுகளைத் தாக்குவதை அனுமதிக்க மாட்டோம்."

மேற்கண்டவாறு அந்தச் செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகளை ஒழிக்க எந்த நாட்டுக்குள்ளும் மியான்மர் போன்று உள்நுழைந்து தாக்குதல் நடத்த மத்திய அரசு தயங்காது" என வீராவேசம் பேசிய மத்திய பாஜக அமைச்சரிடமிருந்து மேற்கண்ட மியான்மர் அதிபர் மாளிகையின் அறிக்கை குறித்தான எந்தப் பதிலையும் காணமுடியவில்லை.

புதன், 10 ஜூன், 2015

தினமும் 5-முறை யோகா செய்யும் எங்களுக்கு உங்கள் யோகாவெல்லாம் தேவையில்லை!


மத்திய காவி அரசு பல வழிகளிலும் தனது காவிச் சிந்தனையை பிற மதத்தினர் மீது திணித்து வருகிறது! அதில் ஒன்றுதான் யோகா தினம்!

எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லைப்பா! உங்க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ‘முஹம்மது மிகப் பெரிய யோகி’’ என்று சொன்னது உண்மைதான்! அந்த யோகி உங்களது யோகாவை விட சிறப்பான யோகத்தை எங்களூக்கு கற்றுத் தந்துள்ளார்! அதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கோடிக்கணக்கான மக்கள் செய்து கொண்டு தான் இருக்கிறோம்!

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் உட்ற்பயிற்சி வகுப்பில் வஜ்ராசனம் சொல்லிக் கொடுக்கும் போது முஸ்லிம் பசங்க அசால்ட்டா செய்யுரானுங்க உங்களூக்கு என்ன வந்தது என ஆசிரியர் கேட்கும் போது நான் சொன்னேன் அது எங்களுக்கு தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பு நிலை அதனால் எங்களுக்கு பழகி விட்டது சார் ! என்ற போது அந்த கிறி்ஸ்தவ ஆசிரியர் வியந்தது இப்பொது நினைவுக்கு வருகிறது!

அதனால உங்க யோகாவெல்லாம்
எங்களுக்கு தேவையில்லை காவி பாய்ஸ்!

-செங்கிஸ் கான்

பாரதிய ஜனதா ஒரு அரசியல் கட்சி அல்ல என்பதை மக்கள் உணரத்தொடங்கிவிட்டனர்..

               பாசிச தன்மை கொண்ட இந்துத்துவ பிரசார நிறுவனத்தின் அரசியல் பிரிவை ஜனநாயக அரசியல் கட்சி என்று நம்பி ஆட்சியை கொடுத்த நாம் அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்...

காங்கிரஸ் போன்று CPM போன்ற அரசியல் கட்சிகளுக்குள் பலதரப்பட்ட சமூக மக்களின் பிரிவுகள் அடங்கி இருக்கும் உதாரணமாக தொழிலாளர் பிரிவு, விவசாய பிரிவு, இலக்கிய பிரிவு, போக்குவரத்து பிரிவு இப்படி பல..கட்சியின் முடிவுகளில் இவற்றின் நலன்கள் இருக்கலாம், ஆனால் இவை கட்சியை கட்டுப்படுத்தாது...

ஆனால் பிஜேபி யில் இது தலைகீழ் ஆர்டர், பிஜேபி என்பது பார்பன மேலாண்மை வெறி கொண்ட RSS என்னும் நிறுவனத்தின் ஒரு பிரிவே..பிஜேபியின் தலைவர்களில் தொடக்கி அமைச்சர்கள், எம்பிக்கள் வரை அத்தனை பெரும் பாராளுமன்றம் போவதை விட நாள்தோறும் பூனேவில் இருக்கும் RSS தலைமை அலுவலகத்திற்கு செல்வதை கவனித்தாலே புரியும்...இங்கு பிஜேபி என்னும் கட்சி RSS என்னும் இந்துத்துவ நிறுவனத்தை கட்டுபடுத்தாது, RSS தான் 40 கோடி மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு அரசியல் கட்சியை கட்டுபடுத்தும்...

பாஜக தலைவர்களிடமும், H ராசா, பொன்.ரா போன்றவர்களிடமும் ஒரு அரசியல் தலைவர்களுக்கு உண்டான குறைந்தபட்ச ஜனநாயக தன்மை கூட இல்லாததை கவனியுங்கள். நாட்டை ஆள்பவர்கள் நாட்டின் நிர்வாகத்தை பற்றியோ, சமூக பிரச்சனைகளை பற்றியோ, மக்களின் பொருளாதார பிரச்சனைகள் பற்றியோ பேசாமல் சதா மாட்டுகரியை பற்றியும், இஸ்லாமியர்களை தூற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், பகவான் கிருஷ்ணன் பற்றியும் பேசித்திரியும் ஒருவித தீவிர மத நோய்க்கு ஆளானவர்கள் எப்படி அரசியல்வாதிகளை போல் ஆட்சி நடத்த முடியும்..

வெறும் மதவெறியாள் காலத்தை ஓட்ட முடியாது என்பதை அறிந்து முதலாளிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்தியாவை விற்றாவது தங்கள் பாசிச பார்பனிய மதவெறியை நாடெங்கும் பரப்ப துடிக்கிறார்கள்...இவர்களுக்கு தெரிந்த ஒரே ட்ரிக்கு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றும் சமயங்களில் எல்லாம் மக்கள் கவனத்தை தேவை இல்லாத சர்ச்சைகளில் திருப்பி விடுவதுதான்...

IIT அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை என்பது மக்கள் நிலம் பிடுங்கி சட்டத்தை அவசரச்சட்டமாக மூன்றாவது முறையாகவும் தாங்கள் கொண்டுவந்ததை மறைக்கவே...

நிர்வாக திறமையற்ற, ஜனநாயக தன்மையற்ற மத வெறியர்களிடம் சிக்கிக்கொண்டு தவிப்பதை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர்...
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது ஓய்...

செவ்வாய், 9 ஜூன், 2015

ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...



                தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 அவ்வாறு தலைக்கவசம் அணியத் தவறினால் ஓட்டுநர் உரிமம் உள்பட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 என்.குமார் என்பவர் கடந்த 2011, மே மாதம் 2-ஆம் தேதி, சென்னை- விருகம்பாக்கம் போக்குவரத்து மண்டல அதிகாரி அலுவலகம் எதிரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

 அதில், தலை உள்பட உடலின் பல்வேறு பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார் அதே மாதம் 4-ஆம் தேதி இறந்தார்.

 இதையடுத்து, ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு கோரி குமாரின் மனைவி மல்லிகா தனது குழந்தைகளுடன் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார்.

 வழக்கை விசாரணை செய்த தீர்ப்பாயம் இழப்பீடாக ரூ. 12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பாயம் வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கூறி, அதை உயர்த்தி வழங்குமாறு மல்லிகாவும், குழந்தைகளும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

 இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.கிருபாகரன் முன் நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
 தர்மம் தலை காக்கும் என்று தமிழில் கூறுவார்கள். தர்மம் தலை காக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், தலைக்கவசம் உயிரையும், தலையையும் காக்கும்.

 மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-இன் படி கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாததால் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது.

 இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், அதிகாரிகள் அதைப் பின்பற்றுவதில்லை. பொதுவாக சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதில்லை.

 தலைக்கவசம் அணியாத காரணத்தால் கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கி 6,419 பேர் தமிழகத்தில் மட்டும் இறந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 17 பேர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

 இந்த வழக்கு விசாரணையின் போது, "இறந்தவர் விபத்து நடந்தபோது தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் அவர் உயிரிழப்பதைத் தடுத்திருக்கலாம்' என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. இருந்தாலும் அந்த வாதத்தை பதில் மனுவில் அவர்கள் கொண்டுவரவில்லை. அதனால், அந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 எனவே, தீர்ப்பாயம் வழங்கிய ரூ. 12 லட்சத்து 23 ஆயிரத்து 100 இழப்பீட்டை ரூ. 20 லட்சமாக உயர்த்தி வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், 7.5 சதவீத வட்டியுடன் மேல் முறையீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும்.

 தலைக்கவசம் அணியாததால், கடந்த 2005-ஆம் ஆண்டு 1,670-ஆக இருந்த இறப்பு 2014-ஆம் ஆண்டில் 6,419-ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது ஓட்டுபவரின் உயிருக்கே ஆபத்தானது.
 எனவே, தலைக்கவசம் அணிவது தொடர்பாக இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுகளை, வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது.

 அவ்வாறு போலீஸார் மீது ஏதாவது லஞ்சப் புகார் வந்தால், அதை கடுமையாகக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 எனவே, ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஜூன் 18-ஆம் தேதிக்கு முன்னர் பொது மக்களுக்கு தமிழக உள்துறைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர் இருவரும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தத் தவறினால், உள்துறைச் செயலரும், டிஜிபியும் ஜூன் 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

 இது தவிர, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இதர தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

 அனைத்து மாநிலங்களிலும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

 மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம்!
 இரு சக்கர வாகன ஓட்டிகள் அணியும் ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்டதாக இருக்க வேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாவது:
 இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியத் தவறினால், ஓட்டுநர் உரிமம் உள்பட வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசம் வாங்கிய ரசீதைக் காட்டிய பிறகே வாகனத்தின் ஆவணங்களும், உரிமமும் திருப்பித் தரப்படும் எனவும், பொது மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.

 மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கண்காணிப்பதற்காக, முக்கிய சந்திப்புகள், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

 அவ்வாறு தலைக்கவசம் அணியவில்லை எனில், நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 ஜூன், 2015

வாக்காளர்களின் விரலில் மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவு



தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அடையாள மையை பெரியதாகவும், தடிமனாகவும் வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களின் விரலில் அதிகாரிகள் சரியாக மை வைப்பதில்லை என தொடர்ச்சியாகப் புகார் எழுந்ததையடுத்து மேற்கண்ட முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில், "வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலின் நக முனையிலிருந்து முதலாவது மூட்டு தொடும் வரை பெரிய அளவில் பட்டையாக மை வைக்க வேண்டும்; இதற்காக பிரத்யேக பிரஷ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம் பொருந்திய பொத்தானை வாக்காளர் அழுத்துவதற்கு முன்பு அவரது விரலில் அழியாத மை வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளும் தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சில தேர்தல்களில் வாக்களர்களின் விரலில் சரியாக மை வைக்கப்படவில்லை என புகார்கள் வந்ததால், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கவுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு இதுகுறித்துப் பயிற்சி அளிப்பதுடன், பெரிய மை குறித்த அறிவிப்புச் சீட்டை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து அனுப்பி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் விரல்களில் மை வைக்க சில இடங்களில் தீக்குச்சியைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மையுடன் சேர்த்து, பிரஷ் ஒன்றையும் அனுப்பி வைக்குமாறு மைசூர் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும், "மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ்' நிறுவனத்திடம் இருந்து வாக்குப்பதிவு அடையாள மை கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் கடந்த 1962-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முதல் தற்போது வரை மை வழங்கி வருகிறது. சில வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து மை அனுப்பப்படுகிறது.

புதன், 3 ஜூன், 2015

மேகி நூடுல்ஸ் சர்ச்சை : கேரள அரசு புதிய உத்தரவு...



ஆபத்தான வேதிப்பொருட்களை பயன்படுத்தியதால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள மேகி நூடுல்ஸ் பொருட்களுக்கு கேரள அரசு தடை செய்துள்ளது. கடைகளிலிருந்து மேகி நூடுல்சை திரும்பப் பெற கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.  

மேகி நூடுல்ஸ் உணவில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், நாடு முழுவதிலும் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மேகிநூடுல்சுக்கு தடைவிதித்துள்ள கேரள அரசு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் உணவு பாதுகாப்பு விதிமுறைக்கு உட்பட்டே ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

வியாழன், 16 ஏப்ரல், 2015

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு...


ஏப்-16.ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து ஆய்வுச் செய்ய மதுரை மக்கள் கண்காணிப்பகம் முன்முயற்ச்சியில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச் சுரேஷ் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் டிஜிபி ராம் மோகன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சத்தியபுரதாப் பால், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன், தடய அறிவியல் நிபுனர் மரு. சேவியர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 



இக்குழு கடந்த 14-04-2015 அன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு முதலில் நகரி காவல் நிலையத்தில் விசாரணை மேற் கொண்டனர். பிறகு சம்பவம் நடைபெற்ற வனப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் வனப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்