ஆபத்தான வேதிப்பொருட்களை பயன்படுத்தியதால் சர்ச்சைக்குள்ளாகியுள்ள மேகி நூடுல்ஸ் பொருட்களுக்கு கேரள அரசு தடை செய்துள்ளது. கடைகளிலிருந்து மேகி நூடுல்சை திரும்பப் பெற கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் உணவில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், நாடு முழுவதிலும் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேகிநூடுல்சுக்கு தடைவிதித்துள்ள கேரள அரசு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை திரும்பப்பெற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு விதிமுறைக்கு உட்பட்டே ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்றது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
புதன், 3 ஜூன், 2015
மேகி நூடுல்ஸ் சர்ச்சை : கேரள அரசு புதிய உத்தரவு...
7:33 PM
இந்திய செய்திகள், India News