உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சர் ராம் மூர்த்தி வெர்மாவுக்கு எதிராக எழுதி வந்த பத்திரிகையாளர் ஜகேந்திர சிங்கை எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
அவர் மரணம் அடைவதற்கு முன்பு அளித்த இறுதி வாக்குமூலத்தில், "அவர்கள் ஏன் என்னைக் கொளுத்தினார்கள். அமைச்சரும், அவரது அடியாட்களுக்கும் என்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், என்னை அடித்திருக்கலாமே, என் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள்" என்று கதறியுள்ளார்.
இந்த இறுதி வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சி சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதி, காவலர்களின் பாதுகாப்புடன் பத்திரிகையாளர் ஜகேந்தர் வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை தீயிட்டுக் கொளுத்தியது. இதில் படுகாயம் அடைந்த ஜகேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் ராம் மூர்த்தி வெர்மா மற்றும் காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிறு, 14 ஜூன், 2015
என்னை அடித்திருக்கலாமே, ஏன் கொளுத்தினார்கள்? எரிக்கப்பட்ட பத்திரிகையாளரின் ஜகேந்திர சிங் கடைசி வாக்குமூலம்...
10:38 AM
இந்திய செய்திகள், India News