லாலுவை கோமாளியாக சித்திரிப்பவர்கள் ஊடகங்களும் உயர்ஜாதிக்காரர்களும். தங்களின் எரியும் வயிற்றை அணைக்க வழியின்றி இது போன்ற அற்ப வசைகளின் மூலம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். லாலுவையும் நிதிஷையும் முட்டி மோத செய்து தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொண்டவர்கள் இன்று அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
நிதிஷின் சாதனை பீஹாரின் தொழில் முனேற்றம் என்றால் லாலுவின் சாதனை பீஹாரின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம் சமுக நீதி கொண்டாட்டம்.
லாலு அமைத்த வீதிகளில் நிதிஷ் செப்பனிட்டு சாலை அமைத்தார்.அந்த நன்றிக்கடனை தான் இன்றைய பீஹார் செலுத்தியுள்ளது.
லல்லு நிதிஷின் பிரிவை தங்களுக்கான அட்சய பாத்திரமாக கொண்டு அழைந்தவர்கள் அவசரம் நிறைந்தவர்கள்.தாங்களாகவே போட்டு உடைத்தார்கள்.
லல்லுவின் ஆட்சியை நிதிஷ் காட்டு தர்பார் என சொல்லவில்லையா? என்கிறார்கள் பி.ஜே.பி.காரர்கள்.அவர்கள் தங்களுக்கு மத்தியில் அள்ளி தெளித்த அசிங்கங்களை முகத்தில் அப்பிக் கொண்டே இதை கூச்சமின்றி சொல்லி திரிகிறார்கள்.
லல்லுவின் ரயில்வே பட்ஜெட் பல படித்த ஹிந்துத்துவ கதாநாயகர்களை கைப்பிள்ளை வேடத்திற்கும் லாயக்கற்றவர்களாக ஆக்கி விட்டது.ஆக கட்டுரை லல்லுவிற்கான சான்று.