மணிப்பூர் புதிய கட்சியை தொடங்கினார் இரோம் ஷர்மிளா ~ சஹாரா தமிழ்

ads

புதன், 19 அக்டோபர், 2016

மணிப்பூர் புதிய கட்சியை தொடங்கினார் இரோம் ஷர்மிளா

இம்பால், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இரோம் ஷர்மிளா  2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். அசாம் ரைபிள்ஸ் படையினரால் 200-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 16 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடினார்.

உண்ணாவிரதம் தொடங்கிய 3-வது நாளில் மணிப்பூர் மாநில அரசால் தற்கொலைக்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். இதையடுத்து  அவரை கைது செய்த போலீசார்  பலவந்தமாக சிகிச்சை அளித்தனர்.இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்னா விரதத்தை  முடித்துக்கொள்ள திட்டமிட்டு கடந்த ஆகஸ்டில் இரோம் ஷர்மிளா உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

இந்நிலையில், இன்று  மணிப்பூர் தலைநகர் இம்பாலில், செய்தியாளர்களை சந்தித்த இரோம் ஷர்மிளா, புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  மக்கள் எழுச்சி நீதி கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் மூலமாக, வர உள்ள மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக, இரோம் ஷர்மிளா குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஆவதே தனது முதன்மை இலக்கு என்று கூறிய அவர், தீவிர அரசியல் செயல்பாடுகள் தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆலோசனைகள் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, ஆலோசனை கேட்க திட்டமிட்டுள்ளதாக, இரோம் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்