ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்..! மாணவர் இந்தியா அமைப்பு வலியுறுத்தல்..!! ~ சஹாரா தமிழ்

ads

திங்கள், 24 செப்டம்பர், 2018

ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்..! மாணவர் இந்தியா அமைப்பு வலியுறுத்தல்..!!

சென்னை.செப்.24., தொல்லியியல் ஆய்வாளர் பத்மாவதி எழுதிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் நூலுக்கு பாஸிச அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.நூலின் உரை விளக்கம் கொடுத்த சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்துத்வா தலைவர்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநருக்கு புகார் கொடுத்துள்ளனர்.

இதனை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

இந்த சந்திப்பில் மாணவர் இந்தியா என்ற தமிழகத்தின் முன்னணி மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் அஸாருதீன் அவர்கள் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்