சஹாரா தமிழ்: மஜக

ads

மஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 பிப்ரவரி, 2017

'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்': மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!



பிப்.09,. தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான M.தமிமுன் அன்சாரி MLA தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய தமிமுன் அன்சாரி,கட்சி துவங்கிய ஒரு மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாகப்பட்டினம் தொகுதியில் வென்றார்.

 இந்நிலையில் தற்போதைய பரபரப்பான சூழலில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான தமிமுன் அன்சாரி மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் நாளை தங்கள் கட்சியின் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 நாளை முடிவை அறிவிப்பதாக தமிமுன் அன்சாரி கூறுவதை வைத்து பார்க்கும் போது,அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் இருந்து மஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் முதிர்ந்த அரசியல் என்று அனைவராலும் பேசப்படுகிறது...

திங்கள், 29 பிப்ரவரி, 2016

மார்ச்.26 மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அரசியல் மாநாடு..!

பிப்.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) அறிமுகப் பொதுக்கூட்டம் அய்யம்பேட்டையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது...

இதில் கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அவர்களும், பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூண்_ரஷீத் அவர்களும் அறிமுகப்படுத்தி உரையாற்றினர்...

மேடையின் மூன்று புறமும் திரண்டிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் ஆராவரத்திற்கிடையே கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு மார்ச் 26 அன்று சென்னையில் நடைபெறும் என பொதுச் செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி அறிவித்தார்.

புதிய பாதை - புதிய பயணம் எழுச்சியோடு தொடங்கியிருக்கிறது. இப்பொதுக்கூட்டம் பெரும் உற்சாக அலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்வை உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளித்திருக்கிறார்கள்..

#மஜக_ஊடகப்_பிரிவு

தமீமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) துவக்கம்...

பிப்.28., மனிதநேய மக்கள் கட்சியின் கடந்த அக்டோபர் 6 ,2015 அன்று பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சி யாருக்கு சொந்தம் என்ற வழக்கு எங்கள் தரப்பில் தொடக்கப்பட்டது.

அந்த வழக்கு  கடந்த பிப்ரவரி 25, 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நேற்று (28.02.2016) கும்பகோணத்தில் எங்கள் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் 'புதிய பாதை- புதிய பயணம்' என்ற முழக்கத்தோடு  #மனிதநேய_ஜனநாயக_கட்சி என்ற பெயரில். அரசியல் கட்சியை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று இரவு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற உள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நானும், கட்சியின் பொருளாளராக ஹாரூன் ரஷீதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். புதிய  தலைமை நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்

வரும் சட்டமன்ற தேர்தலில் நமது கோரிக்கைகள் மதிக்கும் வலிமையான கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நேர்மையான அரசியலையும், கண்ணியமான பொதுவாழ்வையும் செயல்படுத்த களம் புகும் எங்களுக்கு அனைவரும் அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறையருளால் எமது புதிய பயணம் புதிய பாதையில் தொடங்குகின்றது

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28_02_2016

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்