சஹாரா தமிழ்: muslims

ads

muslims லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
muslims லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜனவரி, 2016

ஷைத்தானால் உருவாக்கப்படும் சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்

காலங்கள் தோறும் ஷைத்தானால் உருவாக்கப்படும் இந்த அடையாளங்களில் தலையானது சிலையும் சிலை சார்ந்த கலாச்சாரமும்.
                                                                   அல் குர் ஆனும் இதை ஒப்புக் கொள்ளும்...رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ ۖ என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன;(அல்குர்ஆன் : 14:36)
                                                                    சிலையையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையையும் ஒழிக்காமல்,ஒழிக்க எண்ணாமல் ஷிர்க்கை ஒழிக்க இயலாது.ஷிர்க்கை ஒழிக்க முடியாது.
                                                                    சிலை என்பது கல்லிலான, மரத்திலான,விலை மதிப்பற்ற பொருளிலான வெறும் உருவமோ வடிவமோ அல்ல!
                                                                    மாறாக மனித உள்ளங்களை தனது தங்குமிடமாக்கிக் கொண்ட ஷைத்தானிய உணர்வு,ஊக்கம்,உற்சாகம் என எல்லாம் அதில் அடங்கும்.
ِ                                                                    ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ.......அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்(என்பதை நீர் அறிவீரா)? வீணான  எண்ணங்களை கற்பனைகளையன்றி வேறெதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; மேலும் அவர்கள் வெறும் கற்பனையில் மூழ்கி கிடப்பவர்கள்!(அல்குர்ஆன் : 10:66)
                                                                   சிலையும் சிலை சார்ந்த வாழ்க்கை கலையும் கோணலானது,கொள்கையற்றது.எந்தக் கட்டுப்பாடுகளையும் ஒப்புக் கொள்வதில்லை.இலக்குடன் கூடிய வாழ்க்கை சிந்தனையை செயல் முறையை ஏற்றுக் கொள்வதில்லை.
                                                                  தான் என்ற தனித்துவத்தை அகம்பாவத்தை அடிப்படையாகக் கொண்டது.அதை அடைவதற்கு தடையாகக் கருதும் எதையும் அழிக்க தயங்காது.பிற மனிதர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் அவமதிக்கும்.கண்ணியத்தைக் சீர் குலைக்கும்.ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றை உதறித்தள்ளி  உதாசீனப்படுத்தும்.மொத்தத்தில் சிலைக்கும் ஷிர்க்கிற்கும் சிலை கலாச்சாரத்திற்கும் உலகமும் உலக ஆசையும் உடல் இச்சையும் தான் அஸ்திவாரம்.

ஆக்கம்: கீழை SMB

நபிகள் நாயகம் வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!

நபி صلي الله عليه و سلم வேரறுத்த ஷிர்கும்..நாம் சொல்ல மறந்த ஷிர்கும்!
                                                                                                                                                 நபி வழி நம் வழி என வாழும் நாம்...நபி வழியில் எந்த ஒரு சிறு குறையும் ஏற்ப்பட்டு விடக் கூடாது எனக் கருதும் நாம்...நபி வழிக்காக நம் வாழ்வை அர்ப்பணிக்கவும் தயாராகவுள்ள நாம்...சிறப்பிற்குரியவர்கள்...  படைத்த இறைவனின் அருளுக்குரியவர்கள்...
                                                                         وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.(அல்குர்ஆன் : 3:132)அல்லாஹுவின் வாக்கு உண்மையானது!
                                                                       நபி வழி என்பது சடங்கல்ல,சம்பிராதய முறையல்ல.
    நபி வழியில் தெளஹீதும் தொழுகையும் இரு வேறுக் கூறுகள் அல்ல.
       தெளஹீதின் ஒளியை மக்காவில் தொடங்கிய நபி صلي الله عليه و سلم ஐ அப்படியே பின்பற்றுவது தான் நபி வழி.
                                                                      இதில் மாற்றுக் கருத்துடையோருக்கும்,மாறி சிந்திப்போருக்கும் நமக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை.நபி வழியில் எந்த சூழலிலும்  சமரசமில்லை!
                                                                      ஷிர்க் என்பது சிலந்தி வலை....!வலை தானே என எண்ணி தன்னை பாதுகாக்க ஓய்வெடுக்க தஞ்சம் தேடிப் போகும் எல்லா உயிர்களையும் உறிஞ்சி சக்கையாக்கி விடும்.
                                                                    ஷிர்க்கிற்கு என்று எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளமும் கிடையாது.
                                                                    அல்லாஹுவைப் புறக்கணித்து விட்டு ஷைத்தானுக்கு கட்டுப்படும் எல்லாம் ஷிர்க்கின் வகைகள் தான்..
                                                                    அல் குர் ஆன் கூறும்..يَا أَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطَانَ ۖ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلرَّحْمَٰنِ عَصِيًّا என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.(அல்குர்ஆன் : 19:44)

ஆக்கம் : கீழை எஸ்.எம்.பி

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்!

        அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைபள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர்.கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார்.

இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அகம்து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மத்த்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.

நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது.இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது.

இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்