கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் அண்மைக்காலமாக பல முஸ்லிம்களை இலங்கைப் பொலிஸார் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றதாகக் கூறி அப்பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். பல முஸ்லிம்கள் இவ்வாறு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், அந்தப் பகுதியில் திட்டமிட்டு நடத்தப்படும் குற்றச்செயல்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மாளிகாவத்தை பள்ளிவாசலில் நடந்த தொழுகையை அடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களுமாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் போது,"நாட்டில் சட்டம் என்ற ஒன்றில்லை என்பதை அரசாங்கத்துக்கும் முழு உலகுக்கும் எடுத்துக் காட்டுவதே எமது நோக்கம்" என உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த எம்.என். அபூபக்கர் தெரிவித்தார்.
வீரகேசரி இணையம்.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
முஸ்லிம்கள் படுகொலை : மாளிகாவத்தையில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டம்.
1:32 PM