மங்களூர், செப்.6-`பர்தா' அணிந்து வர மாணவிக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள் விடுத்தனர். அந்த வேண்டுகோளை கல்லூரி நிர்வாகம் ஏற்று மாணவிக்கு பர்தா அணிந்து வர அனுமதி வழங்கியது.அனுமதி மறுப்புமங்களூர் அருகே பண்ட்வாலில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாண்டு படிக்கும் மாணவி ஆய்ஷா அஸ்மின் (வயது 19). இவர் கல்லூரிக்கு `பர்தா' உடை அணிந்து வந்தார். அவரை வேறு ஆடை அணிந்து வரும்படி கல்லூரி முதல்வர் சீதாராமையா கூறினார்.ஆனால் அந்த மாணவி பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தார். இதனால் முதல் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுத அந்த மாணவிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அனுமதி வழங்கியதுஇதை தொடர்ந்து, அந்த மாணவி பர்தா உடை அணிந்து கல்லூரிக்கு வர தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மங்களூர் மாவட்ட கலெக்டர் பொன்னுராஜிடம் மனு கொடுத்தார். இதுபற்றி கலெக்டர் பொன்னுராஜ், அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவித்தார்.இதற்கிடையே கல்லூரி நிர்வாகி காவேரியப்பா, முதல்வர் சீதாராம் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ரமனாத் ராய் (பண்ட்வால் தொகுதி), காதர் (உள்ளால்) ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, மாணவி ஆய்ஷா அஸ்மின் பர்தா அணிந்து வர அனுமதி அளிக்கும்படி எம்.எல்.ஏ.க்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டு பர்தா அணிந்து வர மாணவிக்கு அனுமதி வழங்கியது.
நன்றி: தினத்தந்தி
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
'பர்தா' அணிந்து வர மாணவிக்கு அனுமதி.
1:53 PM