முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ரேஷன் கடையில் முறைகேடு நடப்பதை கண்டித்து பொது மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முதுகுளத்தூர் திடல் தெரு ரேஷன் கடையில் 20 கிலோ அரிசிக்கு பதில் 15 கிலோ அரிசி வழங்கிவிட்டு கார்டில் 20 கிலோ வழங்கியதாக பதியப்படுகிறது. பாமாயிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. பருப்பு உள்ளிட்ட பொருட்களின் எடையும் குறைகிறது . இது தொடர்பான புகாரை தொடர்ந்து ஐந்து தெருக்களை சேர்ந்த பொது மக்கள் த.மு.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் அஜிஸ்கனி, வக்கீல் அன்சாரி தலைமையில் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிவில் சப்ளை தாசில் தார் கதிரேசன் கூறுகையில், "பொது மக்கள் விற்பனையாளர் மீது கூறியுள்ள புகார் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
thank you - tmmk-ksa.com
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
ரேஷன் கடை முற்றுகை.
2:08 PM