உலகின் பல பேர் இன்றைக்கும் பயப்படுவது ஊசி போட்டுக் கொள்ளத்தான், ஏனென்றால் அதன் வலி கடுமையாக இருக்கும்.
அதனாலேயே சிலர் கையில் ஊசி போட தயங்கி கீழ் இடுப்பில் போட்டு கொள்வார்கள். இருந்தும் பலர் எவ்வளவு மாத்திரை டானிக் வேனும்னாகொடுங்க ஆனா ஊசி மட்டும் வேண்டாம்னு சொல்வார்கள்.
அதே சமயம் ஊசி மருந்து உடம்பில் செலுத்திய சில நொடிகளில் உடம்பின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று உடனே அதன் வேலையை காட்டத் தொடங்கும். இப்போது லண்டன் கிங் காலேஜில் ஒரு புது வகை ஊசியை உலர்ந்த சர்க்கரை மூலம் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இது ஒரு நெற்றி பொட்டு அளவுக்குதான் இருக்கும், கூடவே இதில் உங்கள் நோய்க்கேற்ற மருந்து இருக்கும் இதை அப்படியே உடம்பில் ஒட்டி விட்டால் போதும். இதில் உள்ள உலர்ந்த சர்க்கரை உருகி உடம்போடு சென்று இந்த மருந்தை கொஞ்சமும் வலியில்லாமல் செலுத்த ஏதுவாகும்.
இதை காச நோய், எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு உபயோகபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். இதன் மூலம் தொற்று வியாதி பயம் வேண்டாம்.
வியாழன், 21 பிப்ரவரி, 2013
ஊசி போட்டுக்கொள்ள பயப்படுபவர்களுக்கு வலி தராத புதிய ஊசி
4:33 PM
மருத்துவம்