சஹாரா தமிழ்: மருத்துவம்

ads

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை !

இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொறு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்.

டெங்கு காய்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது.

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா. அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது. உடல் என்ன செய்யும் ? நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள் ?

அலோபதி சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா. மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து. வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.

பல நாடுகளில் காய்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு டங்குங்கராங்களே அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக்காய்சல்.

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.

இதை தான்

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு

1 - அலோபதி சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இந்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate Allopathy மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Allopathy Business - விளைவு சாவு.

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Allopathy தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த புளுகு புளுகுகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

நல் உள்ளம் படைத்தோர் இந்த கட்டுரையை உலக மக்களுக்கு கொண்டு செல்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி...
வாட்ஸ்அப் தகவல்

திங்கள், 11 ஜனவரி, 2016

சளி தொல்லையா? இத படிங்க!

சளி தொல்லையா? இத படிங்க!

இரத்தம் தேவை அவசரம் - ஓ பாசிடிவ் (O+)

உறவுகளே உதவுங்கள்

உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி ABC hospital ல் அட்மிட் ஆகிருக்கும் ஒரு சகோதரருக்கு டயாலிஸ் பன்னுவதால் இன்னும் 2 யூனிட் O positive(O+) இரத்தம் தேவைப்படுகிறது.

இந்த இரத்தம் உள்ள மனிதநேய சொந்தங்கள், இரத்த தானம் செய்து உயிரை காப்பாற்ற உதவுங்கள்.

இறைவன் நீங்கள் அறியாத புறத்திலிருந்து உங்களுக்கு உதவுவான்.

தொடர்புக்கு: 7200939391

பதிவு நாள் : 11.01.2016

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

எபோலா நோய்: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை சோதனையிட முடிவு

எபோலா நோய்: சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளை சோதனையிட முடிவு

சென்னை, கடந்த பிப்ரவரி மாதம் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் மளமளவென்று அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இதுவரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த நோய்த் தொற்று கண்ட ஒரு பயணி நைஜீரியாவிற்கு பயணம் செய்தபோது அங்கு இறந்ததால் அங்கும் இதன் பாதிப்பு தொடரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நோய் குணமாவதற்கான சிகிச்சைமுறைகள் எதுவும் இல்லை என்ற தகவலுடன் இந்த நோய்த்தாக்கத்தின் இறப்புவாய்ப்பு 90 சதவிகிதம் என்பதுவும் இதன் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை விமான நிலையத்திற்கு எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்திறங்கும் பயணிகளுக்கு இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சென்னை விமான நிலைய சுகாதார அமைப்பும், அரசு நிர்வாகமும் முடிவு செய்துள்ளன.

எபோலா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கோ மற்ற இந்திய நகரங்களுக்கோ நேரடியான விமான சேவைகள் இல்லை.ஆனால் அந்த நாடுகளில் இருந்து அரபு நாடுகளுக்கு வரும் பயணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு சென்னையிலிருந்து செல்லும் இணைப்பு விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுபோல் அதிக அளவிலான நைஜீரியர்கள் இந்தியாவிற்கு வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சில பயணிகள் சென்னை வருகின்றனர் என்று குறிப்பிட்ட விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவ்வாறு வரும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Source - Maalaimalar
#MohamedHaris

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.



இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

அதேபோலத்தான் கறிக்கோழியும். முன்பெல்லாம் கிராமங்களில் கோயில் கொடை விழாக்களிலும், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அந்தந்த மதத்தாரின் கொண்டாட்ட தினங்களில்தான் மட்டன், சிக்கன் சாப்பிடுவார்கள். ஆனால் நகரமயமாதல், விளம்பரமயமாதல் தாக்கத்தால் வாரம்தோறும் வீட்டில் சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கியதன் விளைவு, நாட்டு கோழிகள் பற்றாக்குறையானது. இதனால், கோழியின் உற்பத்தியை பெருக்க பிராய்லருக்கு நகர்ந்தது சமூகம்.

பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கறிக்கோழிக்கு அதிகம் ஆன்ட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் உடலில் கலந்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. ஆனால் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது. இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள்.

மருந்தின் வீரியம் அதிகமானால் உடல் சோர்வுறும், பல பக்க விளைவுகள் ஏற்படும்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையில் அவை ஆய்வு செய்யப்பட்டன. அந்த கோழிகளினர் ஈரல், தசை, கிட்னி ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதில் 40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனைச் சாலையின் தலைமை இயக்குனர் சுனிதா நரைன் கூறும்போது, "ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது, கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை" என்றார்.

பொதுவாக கோழிவளர்ப்பில் 6 ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், டெட்ராசைகிளின் வகையறாவான டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் 5 வகை மருந்துகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன அனைத்து கோழிகளிலும் காணப்பட்டன. அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் முறையற்று பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் உறுதியாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிக்கனால், மனிதர்கள் பாதிக்கப்படுவதை சிஎஸ்இ ஆய்வாளர்கள் ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். 2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சிப்ரோபிளாக்சசின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூக்கு முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களையும் எதிர்க்கும் மருந்தாகும். இதன் பலனை மனித உடல் இழக்கும்போது டைபாய்டு உள்ளிட்ட பிற கிருமித் தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக மாறிவிடும், உண்மையில் இந்தியாவில் இது அதிகரித்திருப்பதாக சிஎஸ்இ எச்சரித்துள்ளது.

இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று சி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக மனித குலம் திரும்பாமல் இருக்க வேண்டும்.

வியாழன், 31 ஜூலை, 2014

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...



தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு...
சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ
மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...

ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்..

Source- dinakaran daily newspaper
#Mohamedharis

புதன், 30 ஜூலை, 2014

பூச்சி கத்திரிக்காயா... சந்தோஷப்படுங்கள்!



கத்திரிக்காயில் பூச்சி இருந்தால் சந்தோஷப்படுங்கள். ஆம், நீங்கள் வாங்கிய 1 கிலோ கத்திரிக்காயில் ஒன்றிரண்டு பூச்சி கத்திரிக்காய்களும் சேர்ந்தே வரக்கூடும். அப்படி பூச்சி இருந்தால், அந்த கத்திரிக்காய் 100% இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது என்பது உறுதியாகிவிட்டது என நிச்சயமாக நீங்கள் சந்தோஷப்படலாம். ஆம், மனிதர்களைவிட புழு, பூச்சிகளுக்கு சுவையுணர்வு அதிகம். அவை ஒரு காயைத் தேர்ந்தெடுத்து சுவைக்கின்றன என்றால்... நிச்சயமாக அது 100% இயற்கையாகவும், சுவையாகவும் இருக்கும். பூச்சிகள் சாப்பிடுவதை வைத்தே, இந்தக்காய் விளைந்த தோட்டத்தில் பூச்சிக்கொல்லி விஷம் எதுவும் தெளிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ரசாயனத்தில் விளைந்த காய்கள், பழங்கள் என்றால் சீக்கிரமே அழுகிவிடும். அதேசமயம், இயற்கையில் விளைந்த காய் மற்றும் பழங்கள் என்றால், மெள்ள தோல் சுருங்கும். இதை வைத்தும் நீங்கள் கண்டறியலாம்.

Source- Vikatan EMagazine

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஊசி போட்டுக்கொள்ள பயப்படுபவர்களுக்கு வலி தராத புதிய ஊசி

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRt4KFUXbjGW4rV3SCN4bAIbR1Al1_gi8MzchASNyndQyoyK0id
உலகின் பல பேர் இன்றைக்கும் பயப்படுவது ஊசி போட்டுக் கொள்ளத்தான், ஏனென்றால் அதன் வலி கடுமையாக இருக்கும்.

அதனாலேயே சிலர் கையில் ஊசி போட தயங்கி கீழ் இடுப்பில் போட்டு கொள்வார்கள். இருந்தும் பலர் எவ்வளவு மாத்திரை டானிக் வேனும்னாகொடுங்க ஆனா ஊசி மட்டும் வேண்டாம்னு சொல்வார்கள்.

அதே சமயம் ஊசி மருந்து உடம்பில் செலுத்திய சில நொடிகளில் உடம்பின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று உடனே அதன் வேலையை காட்டத் தொடங்கும். இப்போது லண்டன் கிங் காலேஜில் ஒரு புது வகை ஊசியை உலர்ந்த சர்க்கரை மூலம் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இது ஒரு நெற்றி பொட்டு அளவுக்குதான் இருக்கும், கூடவே இதில் உங்கள் நோய்க்கேற்ற மருந்து இருக்கும் இதை அப்படியே உடம்பில் ஒட்டி விட்டால் போதும். இதில் உள்ள உலர்ந்த சர்க்கரை உருகி உடம்போடு சென்று இந்த மருந்தை கொஞ்சமும் வலியில்லாமல் செலுத்த ஏதுவாகும்.

இதை காச நோய், எயிட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு உபயோகபடுத்த முடியும் என்பது கூடுதல் தகவல். இதன் மூலம் தொற்று வியாதி பயம் வேண்டாம்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்