கொல்கத்தா,பிப்.22 : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரங் கங்குலியின் தந்தை சந்திதாஸ் கங்குலி (75) கொல்கத்தா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
சந்திதாஸ் கங்குலி வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் சந்திதாஸ் கங்குலி மிகப்பெரிய அச்சகத்தை நிறுவி நடத்தி வந்தார். மேலும், அவர் பெங்கால் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் முன்னாள் இணை செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
சவுரங் கங்குலியின் தந்தை சந்திதாஸ் கங்குலி மாரடைப்பால் மரணம்.
8:49 PM