பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிற நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஒருக்காலும் விடப் போவதில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் உறுதி கூறியுள்ளார்.
"இந்தியாவின் பிரதமர் பதவியில் மோடி உட்காருவதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவேன். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைக்கவே முயற்சி எடுப்பேன் " என்றார் லாலு.
அவர் மேலும் கூறுகையில் "மோடிக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இல்லை. அவருடைய பிரதமர் கனவும் பலிக்கப் போவதில்லை. 2002 ஆம் ஆண்டு ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்ப்பலிக்குக் காரணமாக இருந்த நபர் இந்தியாவின் பிரதமராக எப்படி ஆக முடியும். அது கூடவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
ஞாயிறு, 10 மார்ச், 2013
மோடி பிரதமரா.? லாலு காட்டம்...!
8:30 PM
குஜராத் இனப்படுகொலை, ஹிந்து பயங்கரவாதம்