பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
எனினும் குண்டுவெடிப்புக்கு முதல் நாள், அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் செல்போன் திருடு போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சனி, 11 மே, 2013
பெங்களூர் பாஜக அலுவலகம் வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்திய சிம் கார்டு Rss உடையது...!
1:51 PM
இந்திய முஸ்லிம்கள், ஹிந்து பயங்கரவாதம்